- Advertisement -
ஆசிய கோப்பை

இந்த போட்டியில் தோற்றாலும் கண்டிப்பா இதை செய்து பைனலுக்கு வருவோம் – வங்கதேச கேப்டன் பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று செப்டம்பர் 24-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.

நாங்க கண்டிப்பா பைனலுக்கு வருவோம் : வங்கதேச கேப்டன்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேகர் அலி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 38 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஜேகர் அலி கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டிக்காக நாங்கள் சிறப்பாகவே தயாராகி இருந்தோம். ஆனாலும் இறுதியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தம் தான்.

- Advertisement -

இருந்தாலும் இந்த போட்டியின் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய வேளையில் இரண்டாவது 10 ஓவர்களில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை கட்டுப்படுத்தினர். இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். எங்களுக்கு அடுத்த போட்டி நாளை உள்ளது.

இதையும் படிங்க : அங்க அவுட்டாகலன்னா இங்க அடிக்கலாம்.. தனது அடித்து நொறுக்கும் ஆட்டத்தின் 2 திட்டம் பற்றி.. ஆட்டநாயகன் அபிஷேக்

எனவே இந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை அடுத்த போட்டிக்கு முன்னர் திருத்திக் கொண்டு நிச்சயம் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு வருவோம். அடுத்த போட்டியில் எங்களது அணியின் காம்பினேஷன் எவ்வாறு இருந்தாலும் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஜேகர் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -