- Advertisement -
ஐ.பி.எல்

தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்த போது மிரண்டு போயிட்டேன்.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – ஆஸி வீரர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 22 வயதான இளம் அதிரடி ஆட்டக்காரரான ஜேக் பிரேசர் மெக்கர்க் பிக்பேஷ் தொடரில் அசத்தியத்தின் மூலமாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர். அதோடு ஐபிஎல் தொடரிலும் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமாகிய அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் ஒரு மிகச்சிறந்த வீரர் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

தோனி ஒருத்தருக்கு இவ்வளவு வரவேற்பா? :

அதன் காரணமாக இந்த ஆண்டு அவரது விலை பல மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் விளையாடிய சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது நாங்கள் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடினோம். விசாகப்பட்டினம் மைதானம் அந்த போட்டியில் எங்களுக்கு சொந்த மைதானமாக அமைந்தது.

அந்த நேரத்தில் நான் அனைவரும் டெல்லி அணியின் ஜெர்சி அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிக்களுடன் வீரர்கள் தோனியின் ஏழாம் நம்பர் ஜெர்சியை அணிந்து வந்திருந்தார்கள். அதோடு மட்டுமின்றி தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்தபோது ரசிகர்கள் கொடுத்த கரகோஷத்தால் எனக்கு தலைவலியே வந்துவிட்டது.

- Advertisement -

அந்த அளவிற்கு கோஷம் அதிகமாக இருந்தது. என் வாழ்நாளில் இதுவரை கேட்ட அதிகபட்ச சத்தம் தோனி பேட்டிங் செய்ய உள்ளே வரும்போது நான் கண்டது தான். அதுமட்டும் இன்றி அவர் முதல் சிக்சர் அடித்தபோது அதைவிட சத்தம் அதிகமாக இருந்தது. அந்த போட்டியில் தோனி சுமாராக 40 ரன்கள் எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 223 ரன்ஸ்.. ஸ்டீவ் பக்னரை மிஞ்சிய அம்பயர்.. அநியாய தீர்ப்பால் கொதித்த இந்தியா ஏ வீரர்கள்

அவர் களத்திருக்கும் வரும்போதும் சரி அவர் சிக்ஸர்களை விளாசும் போதும் சரி ரசிகர்கள் இப்படி ஒரு ஆளுக்காக இவ்வளவு பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவிற்கு தோனியின் மீது ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனர் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -