யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இப்படி அசத்த இதுதான் காரணம் – கிரிக்கெட் நிபுணர் கொடுத்த விளக்கம்

Jaiswal
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூலை 12-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Jaiswal

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமான துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 387 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 171 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த சிறப்பான இன்னிங்ஸ் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அதோடு அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய அவர் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் இப்படி அறிமுக போட்டியிலேயே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி உரையாடலில் ஒரு கிரிக்கெட் நிபுணர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தனித்துவமான பயிற்சி குறித்து பேசியிருந்தார்.

Jaiswal

அதில் அவர் கூறியதாவது : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கிரிக்கெட்டில் மேலே வரவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதோடு அவரது பயிற்சிகளும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக வலைப்பயிற்சியில் ஒரே விதமான ஷாட்டை 300 முறை அவர் அடித்து பிராக்டீஸ் செய்கிறார். இதன் காரணமாகவே அவரால் பந்தின் மீது உள்ள கவனம் குறையாமல் அவரது ஷாட்டுகளை வெளிப்படுத்த முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? இந்திய அணி எங்கு விளையாடுகிறது? – வெளியான முக்கிய அறிவிப்பு

அதோடு ஒவ்வொரு பந்திற்கும் ஏற்ப அவர் தனித்தனியே பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவரது இந்த கடினமான பயிற்சி தான் அவர் பேட்டிங் செய்யும்போது எந்த இடத்திலும் கவனச்சிதறல் ஏற்படாமல் சரியான முறையில் விளையாட வைக்கிறது என அந்த கிரிக்கெட் நிபுணர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement