ஆசியக்கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? இந்திய அணி எங்கு விளையாடுகிறது? – வெளியான முக்கிய அறிவிப்பு

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற இருந்தது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற்றால் இந்திய அணி அங்கு செல்லாது என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்திருந்தது.

Asia Cup Trophy

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை மட்டும் இலங்கையில் நடத்தவும் மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

இதில் (இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்) ஒரு பிரிவிலும், (இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்) மற்றொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இந்த வாரம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

அதேபோன்று இந்த ஆசிய கோப்பை தொடரானது வரும் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆசியக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தை பாகிஸ்தானில் நடத்த உள்ளதால் பாகிஸ்தான அணி துவக்க ஆட்டத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் 2011 முதல் அது மட்டும் மாறல, ரோஹித் சர்மாவை விமர்சிக்க – தோனியின் மோசமான சாதனையை கிண்டிய கவாஸ்கர்

அதே வேளையில் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுவதால் ஒருவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற்று விளையாடினால் நிச்சயம் இறுதிப்போட்டி இலங்கையில் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement