அணியில் இருந்து நீக்கப்படவுள்ள ஜாதவ். அவருக்கு பதிலா விளையாடும் வீரர் இவர்தானாம் – தோனி வைத்துள்ள பிளான்

Jadhav-2
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 25 ஆவது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் பெங்களூரில் 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

Kohli

- Advertisement -

இரண்டு அணிகளுமே சற்று சிக்கலான சூழ்நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதி சென்னை அணி 16 முறையும், பெங்களூர் அணி 8 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிப்போகிறது.

ஏனெனில் சென்னை அணி காயம்பட்ட சிங்கத்தை போல செயல்பாடு பெரிதாக செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படுவதில்லை கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் வெற்றி பெற வேண்டிய போட்டியை தோல்வியின் பாதையில் தள்ளி விடுகிறார்கள் என்ற விமர்சனம் இருந்துகொண்டு வருகிறது.

Jadhav 1

மேலும் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி கடும் விமர்சனத்தை பெற்று வரும் கேதர் ஜாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு என்றும் வேறு ஒரு வீரர் இறங்க வேண்டும் என்றும் ரசரிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு பதிலாக தமிழக வீரரான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த மூன்று வருடமாக இருந்து வருகிறார்.

Jagadeesan

தற்போது வரை அவருக்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிவருகின்றனர் எப்படிப் பார்த்தாலும் இன்று அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாராயனண் ஜெகதீசன் களமிறங்குவார் என்றும் ஒரு அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement