கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 2025 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக வீரர்களின் மெகா ஏலமானது நடத்தப்பட்டு தற்போது பல்வேறு வீரர்களின் அணிமாற்றம் நிகழ்ந்துள்ளதால் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
சி.எஸ்.கே அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி : ரவீந்திர ஜடேஜா
அந்த வகையில் எதிர்வரும் 2025 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதற்கு அடுத்த போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் அனைத்து சிஎஸ்கே வீரர்களும் தற்போது சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பிடித்து விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா துபாயில் இருந்து நேரடியாக சென்னை வந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள ஜடேஜா கூறுகையில் : எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்னுடைய சொந்த வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளேன். சிஎஸ்கே அணியில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. எங்க தல தான் எங்களுடைய பாஸ். தோனியை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கிறேன்.
அதே போன்று மீண்டும் அஸ்வினுடன் சேர்ந்து விளையாட இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவருடன் அதிக நேரம் செலவிட ஆசை. அவரிடம் இருந்து இன்னும் டிப்ஸ்களை கற்றுக் கொள்ள இருக்கிறேன். இந்த ஆண்டு அவருடன் இணைந்து பந்துவீச இருப்பது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர் கொடுக்கும் அறிவுரைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் என ஜடேஜா கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பாண்டியா ஒன்னும் பெரிய ஹிட்டர்.. பிரட் லீ, ஸ்ரீநாத் கிடையாது ஆனாலும் இதை வெச்சு ஜொலிக்கிறாரு.. அக்தர் பாராட்டு
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 267 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். அதேபோன்று 14 போட்டியில் வெறும் 8 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். ஆனால் இம்முறை இந்த சீசன் அவருக்கு சிறப்பான சீசனாக அமையும் என்றும் தோனியை கோப்பையுடன் அனுப்ப வேண்டும் என்றும் ஜடேஜா நினைப்பார் என்பது உறுதி.