ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா உலக சாதனையும் படைத்தது. இந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக பும்ரா காயமடைந்த சூழ்நிலையில் ஷமி மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடினார்.
அது போன்ற சூழ்நிலையில் பாண்டியா இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். அது போக பேட்டிங்கில் லோயர் மிடில் ஆர்டரில் வந்த அவர் கணிசமான ரன்களை அதிரடியாக குவித்து அசத்தினார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் வக்கார் யூனிஸ், பிரட் லீ கிடையாது என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
திறமையை தாண்டி:
அதே போல பேட்டிங்கில் ரசல் போல அடித்து நொறுக்கும் பவர் கிட்ட கிடையாது என்றாலும் பாண்டியா தன்னுடைய தன்னம்பிக்கையால் தனது திறமைக்கு அப்பாற்பட்டு சிறந்த ஆல் ரவுண்டராக செயல்படுவதாக அக்தர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா ஒன்றும் மார்சல், வக்கார், பிரட் லீ அல்லது ஜவகள் ஸ்ரீசாந்த் கிடையாது. இவை அனைத்தும் அவருடைய மனநிலை மட்டுமே”
“அவரிடம் புதிய பந்தை கொடுங்கள் அதில் அசத்துவார். மிடில் ஓவரில் பவுலிங் செய்யச் சொல்லுங்கள் அதையும் செய்வார். அதே போல அவர் பவர் ஹிட்டரும் கிடையாது. ஆனால் உலக அரங்கில் அசத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர் கொண்டுள்ளார். அந்த மார்க்கெட் அவரை பெரிதாக வருவதற்கு அனுமதிக்கிறது. இதே போல பேட்டிங் செய்யக்கூடியவர்கள் முன்பெல்லாம் பாகிஸ்தான் அணியில் சாதாரணமாக இருந்தனர்”
முக்கியமான பாண்டியா:
“அந்த வகையில் ஹர்திக் பாண்டியா நன்றாக செயல்படுகிறார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் போல ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக அசத்துவதாக முகமது ஹபீஸ் பாராட்டினார். அவர் கூறுவது போல 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்.
இதையும் படிங்க: என்ன அர்ப்பணிப்புயா.. காயமடைந்தும் பயிற்சிக்கு வந்த ராகுல் டிராவிட்.. காரணம் என்ன? வாழ்த்தும் ரசிகர்கள்
முரட்டுத்தனமான உடற்கட்டை கொண்டிருக்காவிட்டாலும் நல்ல ஃபிட்னஸ் பயன்படுத்தி அதிரடியான சிக்ஸர்களை பறக்க விடுகிறார். அடுத்ததாக 2026 டி20 உலக கோப்பையில் இந்தியா நடப்புச் சாம்பியனாக சொந்த மண்ணில் விளையாட உள்ளது. அதில் இந்தியாவின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.