ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராஜஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த வருடம் அந்த அணிக்கு ஜாம்பவான் ராகுல் டிராவிட் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சச்சினுக்கு நிகராக சர்வதேச இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் அவருடைய வழிகாட்டுதலில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 2013க்குப்பின் 11 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியானத் தோல்விகளை முறியடிக்க இந்தியா டிராவிட் உதவியதை மறக்க முடியாது.
டிராவிட் காயம்:
அதைத் தொடர்ந்து தற்போது தம்முடைய முன்னாள் ஐபிஎல் அணியான ராஜஸ்தானின் பதிய பயிற்சியாளர் பொறுப்பை டிராவிட் ஏற்றுள்ளார். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணி தங்களது பயிற்சிகளை ஜெய்பூரில் துவங்கியுள்ளது. ஆனால் அங்கே தங்கள் அணி வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ராகுல் டிராவிட் வந்த விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.
ஏனெனில் காலில் சந்தித்த காயத்தால் சாதாரணமாக நடக்க முடியாத அவர் ஊன்று கோல் உதவியுடன் மெதுவாக நடந்து வந்தார். அங்கே அவரை ராஜஸ்தான் அணி வீரர்களும் உதவியாளர்களும் வரவேற்றார்கள். பின்னர் ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்ட ராஜஸ்தான் அணி வீரர்களை சந்தித்த டிராவிட் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் பயிற்சிகளைக் கொடுத்தார்.
வாழ்த்தும் ரசிகர்கள்:
சமீபத்தில் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடும் போது ராகுல் டிராவிட் காயத்தை சந்தித்ததாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டரில் (எக்ஸ்) அறிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அர்ப்பணிப்பு என்று சமூக வலைதளங்களில் ராகுல் டிராவிட் அவர்களை பாராட்டுகிறார்கள்.
இதையும் படிங்க: இந்த பையன் இப்போவே சம்பவத்துக்கு ரெடியா இருக்கான்.. 13 வயது வீரரை பாராட்டிய – சஞ்சு சாம்சன்
ஏனெனில் மிகப்பெரிய ஜாம்பவானான அவர் நினைத்தால் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் சொல்லி விட்டு ஐபிஎல் துவங்கும் வரை ஓய்வெடுக்க முடியும். இருப்பினும் என்ன விடுப்பும் எடுக்காத அவர் ஐபிஎல் துவங்க 10 நாட்கள் முன்பாகவே அணியுடன் இணைந்து வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க துவங்கியுள்ளார். இங்கே ராகுல் டிராவிட் இந்தியாவுக்காக கேப்டன், ஓப்பனிங், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர், பயிற்சியாளர், என்சிஏ இயக்குனர் போன்ற வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.