என்னுடைய கிரிக்கெட் கரியர் முடிவதற்குள் நான் செய்ய நினைக்கும் சாதனை இதுதான் – ஜடேஜா ஓபன்டாக்

Jadeja-1
- Advertisement -

33 வயதான இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 58 டெஸ்ட் போட்டிகள், 168 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 5000 ரன்களை குவித்துள்ள அவர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 241 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு 168 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 188 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Jadeja

- Advertisement -

டி20 போட்டிகளிலும் அவர் 58 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தி வரும் ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தனது பேட்டிங்கில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் அடித்து தனது திறமையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு காண்பித்துள்ளார்.

அதோடு பந்துவீச்சில் அசத்திய அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியர் முடிவதற்குள் தான் சாதிக்க நினைக்கும் ஒரு சாதனை குறித்து அவர் பகிர்ந்துள்ள ஒரு பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி நிருபர் எழுப்பிய கேள்வியில் உங்களது கிரிகெட் கரியர் முடிவதற்குள் நீங்கள் எந்த சாதனையை செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜடேஜா : நான் என்னுடைய கிரிக்கெட் கரியர் முடிவதற்குள் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு ஒரு சதத்தையும் விளாச வேண்டும் அதுவே எனது ஆசை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அவர் கூறியது போன்றே இந்த சாதனையை அவர் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான போட்டியில் நிகழ்த்தி தனது ஆசையை நிறைவேற்றி உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 175 ரன்களை அடித்தது மட்டுமின்றி அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைய இருக்கும் விக்கெட் டேக்கர் – சொதப்பல் வீரர் நீக்கம்

இருப்பினும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவடைந்ததால் நிச்சயம் ஜடேஜாவிற்கு இரட்டை சதம் அடித்திருக்க ரோஹித் வாய்ப்பளித்திருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement