இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைய இருக்கும் விக்கெட் டேக்கர் – சொதப்பல் வீரர் நீக்கம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மொகாலியில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி துவங்கி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsSL

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

அதே வேளையில் அவருக்கு பதிலாக முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அக்சர் பட்டேல் இரண்டாவது போட்டியில் அணியில் இணைய உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் அக்சர் படேல் இடம்பெற்று விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

axar 2

சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமாகி 5 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஐந்து போட்டிகளில் அவர் இதுவரை 36 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு விக்கெட் டேக்கராக திகழ்கிறார். அதோடு பகுதி நேரமாக பேட்ஸ்மேனாகவும் செயல்படும் அவர் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு கை கொடுப்பார் என்பதால் நிச்சயம் இவரது சேர்க்கை பலத்தை அளிக்கும் என்றே கூறலாம்.

- Advertisement -

அதே வேளையில் முதல் போட்டியில் 2 இன்னிங்க்சையும் சேர்த்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத ஜெயந்த் யாதவ் அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ளார். தற்போது உள்ள பிளேயிங் லெவனில் இவர் மட்டுமே சொதப்பியுள்ளதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை, வீரர்கள் விவரம், உத்தேச ப்ளேயிங் லெவன் இதோ

இந்த ஒரு மாற்றத்தை தவிர்த்து இந்திய அணியில் வேறு பெரிய மாற்றம் நிகழாது என்றும் கூறப்படுகிறது. ரோஹித் கேப்டன் பொறுப்பு ஏற்ற முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement