IND vs WI : கபில் தேவ் மற்றும் வால்ஸ் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – ரவீந்திர ஜடேஜா

Ravindra-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளது. அதன்படி ஜூலை 22-ஆம் தேதி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியும், நிக்கலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. அண்மையில் பொல்லார்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் பூரான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட இருக்கிறது.

INDvsWI

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது எவ்வாறு செயல்படப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரில் ரோஹித், கோலி, பண்ட், பாண்டியா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரவிந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கப்பில்தேவ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வால்ஸ் ஆகிய இருவரது சாதனையையும் ஒரே நேரத்தில் தகர்க்கும் அற்புதமான வாய்ப்பு தற்போது ரவீந்திர ஜடேஜாவிற்கு கிடைத்துள்ளது.

Jadeja

அதன்படி ரவிந்திர ஜடேஜா படைக்கப்போகும் சாதனை யாதெனில் இதுவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்தில் உள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பவுலர்களின் பட்டியல் இதோ :

கர்ட்னி வால்ஸ் – 44 விக்கெட், 38 போட்டிகள்
கபில் தேவ் – 43 விக்கெட், 42 போட்டிகள்
அணில் கும்ப்ளே – 41 விக்கெட், 26 போட்டிகள்
ரவீந்திர ஜடேஜா – 41 விக்கெட், 29 போட்டிகள்
முஹமது ஷமி – 37 விக்கெட், 18 போட்டிகள்

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக இன்னிங்ஸ்களில் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் ஜடேஜாவிற்கு மூன்று போட்டிகள் வாய்ப்பு இருக்கும் நிலையில் இன்னும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் எடுத்தால் அவர் இந்த பட்டியலில் முதலிடத்திற்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement