முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது குறித்து பேசிய ரவீந்திர ஜடேஜா – என்ன சொன்னாரு?

Jadeja-1
- Advertisement -

நடப்பு 15-வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துவங்கிய இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

kkrvscsk

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர்களான கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமலும், கான்வே 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பின்னர் அணியை சரிவில் இருந்து மீட்டு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் உத்தப்பா 28 ரன்களிலும், ராயுடு 15 ரன்களிலும், ஷிவம் துபே 3 ரன்களிலும் வெளியேற சென்னை அணி மிகப் பெரிய சிக்கலை சந்தித்தது.

அதனை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவுடன் கை கோர்த்த தோனி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் தோனி இம்முறை சற்று அதிரடியாக விளையாடினார் என்று கூறலாம். ஆனாலும் இறுதியில் சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதிகபட்சமாக தோனி 38 பந்துகளை சந்தித்து 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் குவித்தனர்.

shreyas

பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரஹானே 44 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்திக்க மைதானத்தில் இருந்த டியூ மிகப்பெரிய காரணியாக மாறியது, நிச்சயம் இந்த போட்டியில் டாஸ் வென்று இருந்தால் நாங்கள் பந்துவீச தான் தீர்மானம் செய்திருப்போம். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும்போது முதல் 6-7 ஓவர்கள் பந்து நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனது. ஆனால் அதே இரண்டாவது இன்னிங்ஸ் டியூ காரணமாக பந்து வழுக்கி சென்றது.

இதையும் படிங்க : கப் மேட்டர் இல்லை, ரோஹித்தை விட தோனி தான் பெஸ்ட் ஐபிஎல் கேப்டன் – பாராட்டி தள்ளிய ஆஸி வீரர்

இருந்தாலும் நாங்கள் போட்டியை முடிந்தவரை டீப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி எல்லோருமே சிறப்பாக பந்து வீசினார்கள். அதிலும் குறிப்பாக பிராவோ மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்றும் இந்த தோல்வி சற்று ஏமாற்றத்தை அளித்தாலும் நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என ஜடேஜா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement