கப் மேட்டர் இல்லை, ரோஹித்தை விட தோனி தான் பெஸ்ட் ஐபிஎல் கேப்டன் – பாராட்டி தள்ளிய ஆஸி வீரர்

CSKvsMI
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாகத் துவங்கியது. வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் கோப்பைக்காக 74 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு வெறும் ஒருநாள் முன்பாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

IPL 2022 (2)

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்:
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சென்னை அணியை வழிநடத்தி வந்த அவரின் இந்த திடீர் அறிவிப்பு சென்னை அணி ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2021 வரை தொடர்ந்து சென்னை அணியை அனைத்து சீசன்களிலும் வழிநடத்தி வந்த அவர் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் பல வெற்றிகளை தேடித் தந்தார்.

2008 – 2021 வரை மொத்தம் 12 வருடங்களில் சென்னை அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அவர் அதில் 11 முறை அந்த அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று 9 முறை இறுதிப்போட்டியில் விளையாட வைத்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ள சென்னை தோனியின் காரணமாக உலகப் புகழ் பெற்றது என்று கூறினால் மிகையாகாது.

Dhoni

இத்துடன் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சென்னைக்காக வென்றுள்ள எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கப் மேட்டர் இல்லை:
த்ற்போது எம்எஸ் தோனி ஓய்வு பெற்று விட்டதன் காரணமாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தான் ஐபிஎல் வரலாற்றில் இனி எப்போதுமே வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என மும்பை ரசிகர்கள் பேசுகின்றனர். இந்நிலையில் 5 கோப்பைகளை வென்றுள்ள ரோகித் சர்மாவை விட 4 கோப்பைகளை பெற்றுள்ள எம்எஸ் தோனி தான் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.

Hogg

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்றுள்ளார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி 4 கோப்பைகளை வென்றுள்ளார். இந்த ஆதாரத்தின் அடிப்படையின் காரணமாக எம்எஸ் தோனியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டனா? என்பதை அந்த வகையில் கணக்கிட முடியாது. உங்கள் கேப்டன்ஷிப் கேரியரில் எவ்வளவு வெற்றி சதவீதங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் 204 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள தோனி அதில் 60% போட்டிகளை வென்றுள்ளார். எனவே 100 போட்டிகளுக்கு மேல் கேப்டன்ஷிப் செய்யும் யாராலும் தோனியின் இந்த சாதனையை உடைக்க முடியாது. அதன் காரணமாக ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக அளவில் அவர் ஒரு மிகச் சிறந்த கேப்டன்” என கூறினார்.

- Advertisement -

மகத்தான கேப்டன்:
அவர் கூறுவது போல ஒரு கேப்டனின் மதிப்பை அவர் வென்ற வைத்து கோப்பையை கணக்கிட்டாலும் உண்மையான மதிப்பை அவர் பெற்றுக்கொடுத்த வெற்றி சராசரியின் அடிப்படையில் சில ஜாம்பவான்கள் கணக்கிடுவார்கள். அந்த வகையில் கேப்டன்ஷிப் செய்த 204 போட்டிகளில் 121 வெற்றிகளை 59.60% என்ற சராசரியில் பதிவு செய்துள்ள எம்எஸ் தோனி போட்டிகள் மற்றும் சராசரி அடிப்படையில் 5 கோப்பைகள் வென்றுள்ள ரோகித் சர்மாவை காட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார். அதிலும் சென்னை அணிக்காக 190 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் 116 வெற்றிகளை 61.37% என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். மறுபுறம் இதுவரை 129 போட்டிகளில் மும்பைக்கு கேப்டன்ஷிப் செய்துள்ள ரோகித் சர்மா 75 வெற்றிகளை 59.68% என்ற சராசரியில் பதிவு செய்துள்ளார்.

cskvsmi

மேலும் ரோகித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே சாதித்து இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளார். ஆனால் தோனி என்பவர் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலகக் கோப்பையை வென்று தன்னை நிரூபித்து அதன்பின் ஐபிஎல் தொடரிலும் வெற்றிகரமாக இருந்து இந்தியாவிற்காக 3 வகையான உலக கோப்பைகளை வென்று காட்டியவர். எனவே ரோகித் சர்மாவை விட எம்எஸ் தோனி தான் மிகச் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை என பிராட் ஹோக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நீங்க வேணா பாருங்க, ரோஹித் மாதிரி இவரும் பெரிய கேப்டனாக வருவாரு – ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஏனெனில் அவர் மேலும் ஒரு வருடம் கேப்டன்ஷிப் செய்து 5-வது கோப்பையை வென்று ரோகித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்தேன். இருப்பினும் தனது அணியின் நலனுக்காக முடிவெடுத்து சென்னைக்காக ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ள அவரின் முடிவு பாராட்டத்தக்கதாகும்” என கூறினார்.

Advertisement