2019 உலகக்கோப்பை அரையிறுதியில் அரைசதம் அடித்ததும் இவரை தான் தேடினேன் – ரவீந்திர ஜடேஜா ஓபன்டாக்

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தனிமை முகாமில் இருக்கும் இந்திய வீரர்கள் பலரும் பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களிடம் தற்போது பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பின்னர் ஒரு நபரை மட்டும்தான் நான் அந்த இடத்தில் தேடினேன் என்று ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Jadeja 1

- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் தோல்வி அடைந்திருந்தாலும், அந்த போட்டியில் தனித்து நின்று சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற ரவீந்திர ஜடேஜாவின் போராட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த போட்டியில் 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்திருந்தார் ரவீந்திர ஜடேஜா.

இந்த உலக கோப்பை தொடருக்கு முன்பாகவும், தொடர் ஆரம்பித்த பிறகும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போது வர்ண்ணையாளராக உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவீந்திர ஜடேஜாவை ஒரு அரைகுறை வீரர் என்றும் அவரால் இந்திய அணிக்கு எந்தவித உபயோகமும் இல்லை என்றும் கூறி அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதனை நினைவுகூறும் விதமாக தற்போது பேட்டியளித்துள்ளார் ஜடேஜா. அதில் அவர் கூறியதாவது,

Jadeja 1

நான் அரைசதம் அடித்த அந்த நேரத்தில் மிகவும் சூடாக இருந்தேன். அப்போது வர்ணனையாளர்கள் இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டுமே நான் தேடினேன். ஆனால் அந்த நபர் அங்கு இல்லை. நான் எந்த நபரை தேடி இருப்பேனென்றும், எதற்காக தேடி இருப்பேன் என்றும் உங்கள் அனைவருக்குமே நன்றாக தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

Jadeja 2

அந்த அரையிறுதிப் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் ஒரு வர்ணனையாளராக இடம்பெற்றிருந்தார். அந்த போட்டியில் அரை சதம் அடித்த பின்பு, தனது பேட்டை கத்தி போன்று சுழற்றி தனது கொண்டாட்த்தின் மூலமாக தன்னை அசிங்கப்படுத்திய சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி தர வேண்டுமென்று தான் விரும்பியதாக கூறியிருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. இந்த போட்டியில் ஜடேஜாவின் அபாரத் திறமையை பார்த்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஒரு சிறந்த வீரர் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement