இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது.
Left-arm spinners around the world, are you watching? #INDvSA pic.twitter.com/ozrcmeO44l
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 9, 2019
இதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் நேற்று இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த வலைப் பயிற்சியில் இந்திய அணி கேப்டன் விராத் கோலிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். எதிரணி வீரர்களை தனது அசாத்தியமான பேட்டிங் மூலம் விரட்டியடிக்கும் கோலி நேற்று ஜடேஜா பந்துவீச்சில் சற்று தடுமாறினார். மேலும் ஜடேஜா பந்தில் தவறான ஷாட் ஒன்றை தேர்ந்தெடுத்து அடித்தால் கோலி க்ளீன் போல்ட் ஆனார்.
அதை எதிர்பாராத கோலி பந்து எவ்வாறு ஸ்டம்பை நோக்கி சென்றது என்பது போல ஜடேஜாவிடம் கேட்க அவருக்கு அதேபோன்று பந்தை தொடர்ந்து ஜடேஜா வீசிக்கொண்டே இருந்தார். எனவே எவராக இருந்தாலும் விளையாட்டில் நிதானம் தேவை என்பதனை ஜடேஜா கோலிக்கு தனது பந்துவீச்சின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.