- Advertisement -
ஐ.பி.எல்

ஜடேஜா நாலு விரலை காட்டியதற்கும், போன் பண்ற மாதிரி சைகை காட்டியதற்கும் – உண்மையான காரணம் இதுதான்

ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் விளையாடி 188 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை சேசிங் செய்த ராஜஸ்தான் அணி 143 ரன்கள் மட்டுமே அடித்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அதுமட்டுமல்லாமல் பீல்டிங்கில் நான்கு கேட்ச்களை பிடித்து ஜடேஜா அசத்தினார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணி வீரர்களான மனன் வோரா, கிரிஸ் மோரிஸ், ரியான் பராக், உனட்கட் ஆகியோரது கேட்ச்களை பிடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி மைதானத்தில் பந்து எங்கு சென்றாலும் ஜடேஜாவே துரத்தி துரத்தி பீல்டிங் செய்ததுபோல் நேற்று மைதானம் முழுவதும் பந்து ஜடேஜாவின் கைகளுக்கு மட்டுமே சென்றது. பவுலிங்கில் 4 ஓவர் வீசி பட்லர் மற்றும் துபே ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது தனது நான்காவது கேட்ச் பிடித்த ஜடேஜா கேட்ச் பிடித்ததை கொண்டாடும் வகையில் நான்கு விரல்களை காட்டியதுமட்டுமின்றி போன் செய்வது போன்று சைகை செய்திருந்தார். அவரது இந்த கொண்டாட்டம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் ஜடேஜா அப்படி செய்ததற்கான காரணம் என்ன என்று கேள்விகள் எழத் துவங்கி உள்ளன. அதற்கான தெளிவான பதிலை நாங்கள் இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

அதன்படி இந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக கேட்ச் பிடிக்கும் வீரர்களுக்கு விவோ ஐபிஎல் ஸ்பான்சர் ஆன விவோ நிறுவனம் தங்களது தயாரிப்பில் வெளியாகியுள்ள புதிய ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது அந்தவகையில் நேற்றைய போட்டியில் நான்கு காட்சிகளை ஜடேஜா பிடித்ததால் நிச்சயம் தனக்கு என்று ஒரு போன் கிடைக்கும் என அவர் கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் அவ்வாறு சைகை செய்தார் என்பதே அதன் உண்மையான பின்னணி

- Advertisement -
Published by