அம்பயர் சொல்லியும் கேட்காத ஜடேஜா. அபராதம் விதித்து அதிரடி – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Zampa 1

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தவான் 96 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் 48 ஓவரின் போது ஸ்டார்க் வீசிய பந்தை ராகுல் அடிக்க அப்போது ஜடேஜா பந்துவீசும் பிட்சில் ஓடியதாக நடுவர் இந்திய அணிக்கு 5 ரன்களை அபராதமாக குறைத்தார். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 5 ரன்கள் போனசாக கிடைத்தது. அதன் பின்னர் சற்று நேரத்தில் அந்த அபராதம் நீக்கப்பட்டது.

Jadeja 1

ஜடேஜாவின் இந்த செயலுக்கு இவ்வாறு அபராதம் விதிக்க காரணம் யாதெனில் ஏற்கனவே பிட்சின் நடுவில் ஓட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதனை மறந்து ஜடேஜா மீண்டும் அதே போன்று ஓடியதால் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு அவர் யதேர்ச்சையாக ஓடியதால் எச்சரிக்கப்பட்டு அந்த அபராதம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement