18 ஆவது ஓவரை மோசமாக வீசியும் 20 ஆவது ஓவரை நான் க்றிஸ் ஜோர்டானிடம் வழங்க இதுவே காரணம் – ஜடேஜா பேட்டி

Jordan-1
- Advertisement -

குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான 29வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது ஒரு நம்பிக்கை அளித்தது. அதன் காரணமாக குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

miller

- Advertisement -

இந்நிலையில் நேற்றும் சென்னை அணி தோல்வி அடைந்தது மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 169 ரன்கள் என்கிற டீசன்டான ரன் குவிப்பை வழங்கியதால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. துவக்கத்திலிருந்தே சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் சிறப்பான செயல்பாடு காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் குஜராத் 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதன் காரணமாக நிச்சயம் அந்த அணி தோல்வியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டேவிட் மில்லர் மற்றும் ரஷீத் கான் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் கையிலிருந்த எளிதான வெற்றி வாய்ப்பு பறிபோக க்றிஸ் ஜோர்டான் வீசிய 18ஆவது ஓவர் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

jordan 2

ஏனெனில் அந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி என 25 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்த இறுதிகட்டத்தில் போட்டி குஜராத்தின் கைகளுக்கு சென்றது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்பதனால் இந்த 13 ரன்களுக்குள் குஜராத்தை சுருட்ட முடியும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி ஓவரை வீசிய ஜோர்டான் முதல் இரண்டு பந்துகளில் ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.

- Advertisement -

ஆனால் அதற்கு அடுத்து ஒரு சிக்சர், ஒரு நோபால், ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு பந்து மீதம் இருக்கையிலேயே சென்னை அணி தோல்வியை சந்திக்க மிக முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில் போட்டியின் முக்கியமான அந்த 20வது அவரை ஜோர்டானுக்கு வீச கொடுக்க என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா தற்போது விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்னாலே இப்படி தாங்க. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஜடேஜா பேசியது என்ன?

க்றிஸ் ஜோர்டான் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக இது போன்ற முக்கியமான இறுதி ஓவர்களை சிறப்பாக வீசியுள்ளார். அதேபோன்று அவரால் யார்க்கர் மற்றும் வொயிடு யார்க்கர் என பந்துகளை சிறப்பாக வீச முடியும் என்று நம்பி தான் அவரிடம் கொடுத்தோம். ஆனால் இறுதியில் அவரால் அப்படி வீச முடியாமல் போனதில் மிகவும் வருத்தம் என ஜடேஜா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement