டி20 கிரிக்கெட்னாலே இப்படி தாங்க. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஜடேஜா பேசியது என்ன?

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 29-ஆவது லீக் போட்டி நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 73 ரன்களையும், ராயுடு 46 ரன்களும் குவித்தனர். குஜராத் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

miller

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 51 பந்துகளில் சந்தித்து 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதேபோன்று கேப்டன் ரஷீத் கானும் அதிரடி காட்டி 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இருந்தார். இந்த போட்டியில் குஜராத் அணி துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வந்ததால் நிச்சயம் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி ஐந்து ஓவர்களில் மில்லர் மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக அந்த அணி திரில் வெற்றி பெற்றது.

jordan

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் பந்து வீச்சின் போதும் சிறப்பாகவே துவங்கியிருந்தோம். முதல் 6 ஓவர்களில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. அதுமட்டுமின்றி ரன்களையும் குறைவாகவே கொடுத்தோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் நாங்கள் போட்ட எந்த திட்டமும் எங்களுக்கு கைகொடுக்கவில்லை.

- Advertisement -

இந்த போட்டியின் இறுதி ஓவரை க்றிஸ் ஜோர்டான் சிறப்பாக வீசுவார் என்றுதான் அவருக்கு வழங்கினோம். ஆனால் அவரால் அதனை செயல்படுத்த முடியாமல் போனது. டி20 கிரிக்கெட்டில் இதுதான் அழகு எப்போது வேண்டுமானாலும் போட்டி எந்த நேரத்திலும் மாறும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இந்த போட்டி என ஜடேஜா வருத்தத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த நேரத்துல இப்படியா பண்ணுவ? கொந்தளித்த பிராவோ. கோபப்பட்ட ஜடேஜா – தோல்விக்கு காரணமான தருணம்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று தங்களது 6 போட்டியில் விளையாடிய சி.எஸ்.கே அணி இந்த தொடரில் பெற்ற 5 ஆவது தோல்வியாக இது அமைந்தது. அதோடு சேர்த்து இந்தாண்டு ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பும் தற்போது மங்கியுள்ளதால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement