இந்த நேரத்துல இப்படியா பண்ணுவ? கொந்தளித்த பிராவோ. கோபப்பட்ட ஜடேஜா – தோல்விக்கு காரணமான தருணம்

Bravo
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் நேற்று ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஷித் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே 5 போட்டிகளில் 4 தோல்வியை சந்தித்து இருந்த சென்னை அணிக்கு மிக முக்கிய போட்டியாக அமைந்த இந்த போட்டியிலும் மீண்டும் சி.எஸ்.கே தோல்வியை சந்தித்து தற்போது 6 போட்டிகளில் 5 தோல்வியை பெற்றுள்ளது. அதோடு இந்த ஆண்டிற்கான பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பும் தற்போது சி.எஸ்.கே அணிக்கு படிப்படியாக மறைந்து வருகிறது.

miller

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராயுடு ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் குஜராத் அணி சார்பாக தனி ஒரு நபராக இறுதிவரை நின்று விளையாடிய டேவிட் மில்லர் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 94 ரன்கள் அடித்து சென்னை அணியை வீழ்த்தினார் என்றே கூறலாம். அவருடன் கேப்டன் ரஷீத் கானும் முக்கியமான நேரத்தில் 21 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க குஜராத் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒருகட்டத்தில் சென்னை அணிக்கு எளிதான வெற்றி வாய்ப்பு இருந்தும் அதனை கோட்டைவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வாய்ப்பு தவற விடப்பட்ட போது டுவைன் பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோரும் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் போட்டியின் முக்கிய கட்டத்தில் குஜராத் அணியின் வெற்றிக்கு 22 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிராவோ பந்துவீச்சில் மில்லர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை சிவம் துபே பிடிக்க தவறினார். நேராக வந்த பந்தை ஓடிச்சென்று பிடித்து இருக்க வேண்டிய துபே விளக்கு ஒளியின் வெளிச்சம் காரணமாக அந்த எளிதான வாய்ப்பை தவற விட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த நேரத்தில் தனது அதிரடியை வெளிப்படுத்திய மில்லர் குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதையும் படிங்க : என்னங்க பெரிய கோலி! எனக்கு எதிராக விளையாடிருந்தா இவ்ளோ சதம் அடிச்சுருக்க முடியாது – முன்னாள் பாக் வீரர்

இதன்காரணமாக சிவம் துபே கேட்சியை தவற விட்ட போது பிராவோ கையை தலையின் மீது வைத்து அதிருப்தியை தெரிவிக்க, மறுபுறம் கேப்டன் ஜடேஜாவும் கோபத்துடன் தனது கேப்பை தூக்கி எறிய முயன்றார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement