ஷேன் வார்னே அன்று வைத்த பெயரை இன்று நிஜமாக்கி சாதித்த ரவீந்திர ஜடேஜா – சுவாரசிய பின்னணி

Rock-star
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதல் இன்னிங்சில் 574/8 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிக பட்சமாக இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்கள் விளாசினார்.

Jadeja-1

- Advertisement -

அவருடன் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இந்தியாவின் அபாரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அசத்திய ரவீந்திர ஜடேஜா:
இதனால் பாலோ – ஆன் பெற்ற இலங்கை அணி மீண்டும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 178 ரன்களுக்கு சுருண்டது. இதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இபோட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகள் மற்றும் 175* ரன்கள் எடுத்து இந்தியாவின் அதிரடி வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

ராக்ஸ்டார் ரவீந்திர ஜடேஜா:
இந்த போட்டி மட்டுமல்ல சமீப காலங்களாகவே இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்தியாவிற்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்து வருகிறார். குறிப்பாக தனது அபாரமான சுழல் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் பேட்டிங்கிலும் தேவையான ரன்களை அதிரடியாக அடித்து அசத்தி வருகிறார். அத்துடன் மைதானத்தின் எந்த இடத்தில் இருந்தாலும் அபாரமாக பீல்டிங் செய்து ஸ்டம்பை நோக்கி துல்லியமாக பந்தை எறிந்து எதிரணி பேட்ஸ்மேன்களை மின்னல் வேகத்தில் ரன் அவுட் செய்வதிலும் வல்லவராக இருக்கிறார்.

Ravindra Jadeja

மொத்தத்தில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என 3 வகையான துறையிலும் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் தற்போதைய தேதியில் இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். இதன் காரணமாக இவரை “ராக் ஸ்டார் ரவீந்திர ஜடேஜா” மற்றும் “சர் ரவீந்திர ஜடேஜா” போன்ற பெயர்களில் கிரிக்கெட் வல்லுநர்களும் ஜாம்பவான்களும் ரசிகர்களும் அழைத்து வருகிறார்கள். இதில் சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே தான் அவருக்கு ராக்ஸ்டார் எனும் பெயரை கொடுத்தார் என்பது சிலருக்கு தெரியாது.

- Advertisement -

அன்றே கணித்த ஷேன் வார்னே:
ஆம் கிரிக்கெட் கண்ட மகத்தான சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ஷேன் வார்னே கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த சமயத்தில் மலேசியாவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அந்த அணியில் இப்போது போலவே ஒரு ஆல்ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா அதன் பின் நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

Shane Warne Ravindra Jadeja IPL 2008 RR

இருப்பினும் அப்போது ரவீந்திர ஜடேஜா என்றால் யார் என்றே தெரியாது என்பதாலும் இளமையான பருவம் என்பதாலும் அவருக்கு விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் அந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த பயிற்சியின் போது ரவீந்திர ஜடேஜாவை பார்த்த ஷேன் வார்னே இவரிடம் நிச்சயமாக திறமை உள்ளது என்பதை கணித்து ராஜஸ்தான் அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்கினார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் போன்ற இதர ஐபிஎல் அணிகளில் பல நட்சத்திர வீரர்கள் நிறைந்து இருந்தார்கள். ஆனால் ராஜஸ்தான் அணியில் ஒரு சில நட்சத்திரங்களை தவிர ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் போன்ற இளம் வீரர்களே அதிகம் இருந்தார்கள். இருப்பினும் கூட அந்த வீரர்களை வைத்துக்கொண்டு அபாரமாக கேப்டன்ஷிப் செய்த ஷேன் வார்னே இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார்.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

கணிப்பை நிஜமாக்கிய ஜடேஜா:
அதன்பின் அவர் தலைமையில் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்க துவங்கிய ரவீந்திர ஜடேஜாவை ராக் ஸ்டார் என ஷேன் வார்னே தொடர்ச்சியாக அழைத்து துவங்கினார். நாளடைவில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். ஆரம்ப காலங்களில் இந்திய அணியில் அவர் தடுமாறிய போதும் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவருக்கு அதிக ஆதரவு கொடுத்ததால் நாளடைவில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்படும் துவங்கினார். அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வர்ணனையாளராக மாறிய ஷேன் வார்னே ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் மீண்டும் ராக் ஸ்டார் என தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக அழைத்து வந்தார்.

இறப்பதற்கு முன்பு வரை கூட ரவீந்திர ஜடேஜாவை அவர் ராக்ஸ்டார் என்ற பெயரை வைத்து தான் செல்லமாக கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். மொத்தத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு ஷேன் வார்னே கணித்த கணிப்பை இன்று ரவீந்திர ஜடேஜா நிஜமாக்கி உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் கூட தற்போது அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனியுடன் இணைந்த அவர் இந்தியாவை தனி ஒருவனாக காப்பாற்ற போராடினார்.

இதையும் படிங்க : ஷேன் வார்னே எனக்கு செய்ததை வேறு யாரும் அப்போ செய்யல – மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

அதன் பின் ஐபிஎல் தொடர் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் சமீப காலங்களாக கடைசி நேரத்தில் களமிறங்கும் அவர் அதிரடியாக ரன்களை குவித்து ஒரு பினிஷராக உருவாக துவங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். எனவே ஷேன் வார்னே கூறியது போல உண்மையாகவே “ரவீந்திர ஜடேஜா ஒரு உழைப்பால் உயர்ந்த ராக்ஸ்டார்” என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement