டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ஜடேஜாவை நீக்கியது ஏன்? – சி.எஸ்.கே தரப்பில் வெளியான விளக்கம்

Jadeja
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு இதுவரை ஐபிஎல் தொடரானது சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதன் காரணமாக மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

அவரது வருகைக்கு பின்னர் ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே அணியானது 3 வெற்றி பெற்று மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் சென்னை அணி உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை அடித்துள்ளது.

jadeja 2

இதன் காரணமாக 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி அடுத்ததாக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஜடேஜா விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அதற்கான காரணத்தையும் சிஎஸ்கே நிர்வாகம் தெளிவாக தந்துள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு ஜடேஜா பிட்டாக இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரை வெளியேற்றியுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு தமிழக வீரரான இவரை அனுப்புங்க. என்னமா ஆடுறாரு – மைக்கல் வாகன் பதிவு

ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்த தெளிவான விளக்கத்தை தரவில்லை என்றாலும் அவர் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு உடல் தகுதியுடன் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் அடுத்த போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Advertisement