சி.எஸ்.கே அணியில் ஜடேஜா சேர்ந்து 10 வருஷம் ஆச்சு – சி.எஸ்.கே அணி கொடுத்த ரியாக்ஷன்

Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஜடேஜா 2008-ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை ஐ.பி.எல் தொடரில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2386 ரன்களையும், 127 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு கொச்சியில் டஸ்கஸ் அணிக்காக விளையாடினார்.

பின்னர் 2012-ஆம் ஆண்டு 20 லட்ச ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவிந்திர ஜடேஜா விளையாட தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து அவருடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் கரியரும் மாறியது என்றறே கூறலாம். இன்று மிகப்பெரிய ஆல்-ரவுண்டராக உருவெடுத்து நிற்கும் ஜடேஜாவின் வளர்ச்சிக்கு சிஎஸ்கே-வின் பங்கு அதிகம் என்றால் அது மிகை அல்ல.

- Advertisement -

அந்த அளவிற்கு சிஎஸ்கே அணியில் அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே அசத்தி வருகிறார். மேலும் தோனி ஓய்வு பெற்ற பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக மாறும் அளவிற்கு அவர் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றோடு ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் இணைந்து 10 ஆண்டுகள் ஆனதை சி.எஸ்.கே நிர்வாகம் சிறப்பாக கொண்டாடியுள்ளது. அந்த வகையில் ஜடேஜா பத்து வருடங்களுக்கு முன்னதாக இருந்த ஒரு புகைப்படத்தையும், அதன் பிறகு கடந்த ஆண்டு எடுத்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்துக்காக பிஎஸ்எல் தொடரை புறக்கணித்த ஜாம்பவான் கோச் – கடுப்பான பாக் ரசிகர்கள்

மேலும் “10 Years of Super Jaddu” என்ற கேப்ஷனுடன் சிஎஸ்கே அணி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சி.எஸ்.கே அணியின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை ஜடேஜாவிற்கு பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement