ஐபிஎல் ஏலத்துக்காக பிஎஸ்எல் தொடரை புறக்கணித்த ஜாம்பவான் கோச் – கடுப்பான பாக் ரசிகர்கள்

ipl trophy
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இம்முறை சிறிய அளவில் இல்லாமல் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Ganguly-ipl
IPL MI

இந்த ஏலத்தில் எந்தெந்த தரமான வீரர்களை தங்கள் அணிக்கு வாங்கலாம் என்பது போன்ற முக்கியமான வேலைகளில் அனைத்து ஐபிஎல் அணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த சீசன்களில் சில அணிகளுக்கு சிறப்பாக விளையாடி அதன் அடையாளமாக மாறிய முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் எந்த அணிக்காக மாறி விளையாட போகிறார்கள் என்பதை காண ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்:
இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நிர்வாகம் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோர் அந்த அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Lucknow

அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த ஜாம்பவான் ஆன்டி பிளவர், துணை பயிற்சியாளராக இந்தியாவின் விஜய் தஹியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் லக்னோ அணியின் ஆலோசகராக இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

புறக்கணித்த ஆண்டி பிளவர்:
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் தங்கள் அணிக்கு தேவையான தரமான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆன்டி பிளவர் விரைவில் பெங்களூரு வர உள்ளார். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் “பிஎஸ்எல் டி20 தொடரில் முல்தான் சுல்தான்ஸ்” அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் இந்த ஐபிஎல் மெகா ஏலத்துக்காக அந்த தொடரை பாதியிலேயே விட்டு விட்டு விரைவில் இந்தியா வரவுள்ளார்.

psl 1

பிஎஸ்எல் தொடரில் அவர் பயிற்சியாளராக செயல்படும் முல்தான் சுல்தான்ஸ் அணி இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நடைபெறும் மெகா ஏலத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று பாகிஸ்தான் திரும்பும் ஆன்டி பிளவர் எஞ்சிய பிஎஸ்எல் தொடரில் தொடர்ந்து பங்கேற்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுப்பில் பாக் ரசிகர்கள்:
ஜிம்பாப்வே கண்ட ஒரு மகத்தான கிரிக்கெட் வீரரான ஆண்டி பிளவர் இதற்கு முன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். தற்போது லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லக்னோ அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பை மிகவும் பெருமையாக கருதுகிறேன். கிரிக்கெட் விளையாட்டுக்கு நிகரில்லாத இந்தியாவில் ஒரு ஐபிஎல் அணிக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சஞ்சீவ் கோனேகா மற்றும் லக்னோ அணியுடன் இணைந்து பணியாற்ற முன்னோக்கி காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Andy-Flower

இதை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் கடுப்பாக காணப்படுகிறார்கள். ஏனெனில் ஐபிஎல் மெகா ஏலத்துக்காக இந்தியா உட்பட உலகின் பல முக்கியமான நாடுகளில் உள்ள வீரர்களும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் ஐபிஎல் தொடரை எப்போதுமே பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள் விரும்புவதில்லை. அப்படிப்பட்ட வேளையில் “வெறும் ஐபிஎல் ஏலம் தானே நடக்கிறது? ஆனால் இங்கு பிஎஸ்எல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி அவர் பாதியிலேயே விட்டுவிட்டு செல்லலாம்” என ஆண்டி பிளவரின் இந்த முடிவு பற்றிய சமூக வலைதளங்களில் காட்டமாக கூறுகிறார்கள்.

Advertisement