Shreyas Iyer : தொடரின் ஆரம்பத்தில் இது நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

ஐ.பி.எல் தொடரின் 46 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

iyar
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 46 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 52 ரன்களை அடித்தனர். மேலும், துவக்க வீரர் தவான் 50 ரன்களை அடித்தார்.

அதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஐயர் கூறியதாவது : இது ஒரு சிறந்த தருணம். இந்த தொடரின் ஆரம்பத்தில் பிளேஆப் சுற்றுக்கு செல்வோம் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால், தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம். எங்களது பவுலர்களை அவர்கள் விருப்பத்திற்கு பந்துவீச வைத்தேன் அந்த யோசனை சிறப்பாக அமைந்தது. அதேபோன்று பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுகிறார்கள்.

dc

துவக்கத்தில் தவான் சிறப்பாக ஆடினார், இறுதி நேரத்தில் ரூதர்போர்ட் சிறப்பாக முடித்துவைத்தார். நாங்கள் 15 ரன்கள் அதிகமாக அடித்துவிட்டோம் அதுவும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பவர்பிளே ஓவர்களில் 50 ரன்களை தொடர்ந்து குவிப்பது முக்கியம் அதனை தவான் தவறாமல் சரியாக செய்து வருகிறார். மொத்தத்தில் இந்த வெற்றி மகிழ்ச்சியினை அளிக்கிறது என்று ஐயர் கூறினார்.

Advertisement