நாளைய போட்டியில் இந்திய அணியின் 4 ஆவது வீரர் இவர்தானாம் – வெளியான தகவல்

IND

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணியின் 4-வது வீரராக இறங்கும் வீரர் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக 4-வது வீரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கடந்த சில தொடர்களாகவே நான்காவது வீரராக களமிறங்கி ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திவரும் ஐயர் ரன்களை தொடர்ந்து குவித்து வருகிறார். ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக தேர்வு குழு தலைவர் பிரசாத் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாகவும், மேலும் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அவர் அதிரடியாக தொடர்ச்சியான ஆட்டத்தை நிலையாக கொடுத்து வருவதால் இனி வரும் காலங்களில் அவருக்கே 4-வது வீரராக வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Iyer

எனவே இந்திய அணியின் நான்காவது வீரராக ஐயரை எதிர்காலத்திற்கும் சேர்த்து நிலைப்படுத்திக் கொள்ள ஐயரை இந்த தொடர் முழுவதும் 4 ஆவது வீரராக களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஐயர் ஏற்கனவே சிறப்பாக விளையாடி வருவதால் அவர் மீது இந்த தொடரிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -