ஜெயிச்சுட்டோம்னு நினைக்க வேண்டாம், இது இந்தியா விழிக்க வேண்டிய நேரம் – எச்சரிக்கும் ரெய்னா, காரணம் என்ன

Raina
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலககோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை 90% உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடை வைத்துள்ளது. ஆனாலும் பைனல் வரை முன்னேறி கோப்பையை வெல்வதற்கு இன்னும் சில குறைகளை களைய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோரால் அசத்தும் பேட்டிங் துறையில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேஎல் ராகுல் – ரோகித் சர்மா ஆகியோரும் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக்க்கும் பெரும்பாலான போட்டிகளில் சொதப்பி பின்னடைவை கொடுத்து வருகின்றனர். அதே போல் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமல் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ஷமி ஆகியோரது கட்டுக்கோப்பான செயல்பாடுகளால் ஓரளவு அசத்துகிறது. ஆனால் ஒன்று டெத் ஓவர்களில் ரன்களை வழங்குகிறது அல்லது பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுகிறது.

விழிக்கும் நேரம்:
அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க தன்னுடைய 4வது போட்டியில் பேட்டிங் துறையில் கேஎல் ராகுல் ஓரளவு பார்முக்கு திரும்பி ரன்கள் குவித்தாலும் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ரோஹித் சர்மாவும் ஃபினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக்க்கும் மொத்தமாக சொதப்பினர். அதை விட பவர்ப்ளே ஒவர்களில் பந்து வீச்சு துறை சுமாராக செயல்பட்டதால் அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸ் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். நல்ல வேளையாக மழை வந்த பின் ராகுல் ரன் அவுட் செய்ததால் தப்பிய இந்தியா வெற்றி கண்டது.

Litton-das

இந்நிலையில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டாலும் அடுத்ததாக நாக் அவுட் சுற்று வருவதால் இது இந்திய அணி விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா எச்சரித்துள்ளார். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பவர்பிளே ஓவரில் பவுலிங் மோசமாக இருந்ததாக கவலை தெரிவிக்கும் அவர் மழை வந்ததால் தப்பித்தோம் என்று கூறியுள்ளார். மேலும் சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் செய்த தவறுகளை இம்முறையும் செய்து கோப்பையை நழுவ விடாமல் கச்சிதமாக செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த போட்டியில் வங்கதேசம் போராடிய விதத்திற்கு மழை மட்டும் வராமல் இருந்திருந்தால் வெற்றி அவர்கள் பக்கம் போயிருக்கும். ஏனெனில் முதல் 7 ஓவர்களில் இந்திய பந்து வீச்சு மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கப்பட்டது. அது இந்தியா பாடத்தை கற்க வேண்டிய பகுதியென்று நினைக்கிறேன். அப்போட்டியில் நாம் வென்றிருக்கலாம். ஆனால் போட்டி முடிந்த பின் வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டதாக ரோகித் சர்மாவே ஒப்புக்கொண்டார். அந்த வகையில் நாக் அவுட் சுற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட விரும்பினால் இது விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். ஏனெனில் அடுத்து வரும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் இந்தியா சந்திக்கும் எதிரணிகள் இன்னும் திடமானதாக இருக்கும்”

Raina-2

“எனவே டாப் 5 வீரர்கள் இந்தியாவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும். ரோகித் சர்மா ரன்களை குவிக்க வேண்டும். ராகுலும் ரன்களை குவிக்க தொடங்கியுள்ளது இந்தியாவுக்கு நல்ல அறிகுறியாகும். இன்னும் ஒரு போட்டியில் நாம் அரையறுதிக்கு செல்லும் நிலையில் ரோகித் ஃபார்மில் இருக்கிறார். ராகுல் அப்போட்டியில் ரன்கள் குவித்தார். விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார். சூர்யா அற்புதமாக விளையாடுகிறார். பாண்டியாவும் சிறப்பாக செயல்படுகிறார்”

இதையும் படிங்க : NZ vs IRE : அரையிறுதி வாய்ப்பை வெற்றியுடன் உறுதி செய்த நியூசிலாந்து – 2 ஆம் இடம் யாருக்கு? – ஆஸ்திரேலியா கவலைக்கிடம்

“வங்கதேசத்துக்கு எதிராக கடைசி நேரத்தில் அஷ்வின் அடித்த அந்த சிக்சர் கூட முக்கியமானது. அனேகமாக அதனால் தான் அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த போட்டியில் சஹால் வர வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனெனில் அடுத்த போட்டி மிகப்பெரிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது” என்று கூறினார்.

Advertisement