7 மாதத்துக்கு 7 கேப்டன்கள், சீர்குலையும் இந்திய கிரிக்கெட் – ரசிகர்களின் கவலைக்கு கங்குலியின் அளித்த பதில் இதோ

Ganguly
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா பர்மிங்காம் நகரில் விளையாடிய ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டியில் கடைசி 2 நாட்களில் சொதப்பி வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா அடுத்ததாக 3 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பி இந்தியாவுக்கு முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அடுத்த வாரம் நிறைவுக்கு வரும் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது பல ரசிகர்களையும் அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏனெனில் 2022 கேலண்டர் வருடத்தில் ஜூலை வரையிலான 7 மாதத்தில் ஷிகர் தவான் இந்தியாவை 7-வது கேப்டனாக வழி நடத்த உள்ளார்.

மாதத்திற்கு ஒரு கேப்டன்:
2022 புத்தாண்டு தொடங்கியதும் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் கேப்டன் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதன்பின் 3-வது போட்டிக்கு திரும்பிய விராட் கோலி முதலும் கடைசியுமாக இந்தியாவை வழிநடத்தி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியாவை வழி நடத்தினார்.

rohith

பின்னர் நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ரோகித் சர்மா ஓய்வு கேட்டதாலும் கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதாலும் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். அதன்பின் பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் 6-வது கேப்டனாக செயல்பட்ட நிலையில் தற்போது ஷிகர் தவான் 7-வது கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த 1959இல் அதிகபட்சமாக 5 கேப்டன்கள் இந்தியாவை வழிநடத்தியிருந்த நிலையில் வரலாற்றிலேயே முதல்முறையாக இப்படி 7 கேப்டன்கள் மாறிமாறி செயல்படுவது 2017 முதல் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு பின் நல்ல கேப்டன் கிடைக்காததை காட்டுகிறது.

- Advertisement -

கங்குலி பதில்:
மேலும் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஒன்று காயத்தால் வெளியேறுவது இல்லையேல் என்னமோ ஒரே மாதத்தில் 20 போட்டிகளில் விளையாடியதைப்போல் ஓய்வு கேட்பது என்ற வகையில் ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இவ்வாறு செயல்பட்டால் எப்படி ஒரு கேப்டன் தலைமையில் தரமான வீரர்கள் கிடைத்து நிலையான அணி அமைந்து இந்தியா உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Ganguly

அத்துடன் இப்படியே போனால் இந்த வருடம் முடிவதற்குள் விளையாடும் 11 வீரர்களும் இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு இந்திய கேப்டன்ஷிப் மதிப்பற்றதாக மாறிவிட்டதாகவும் கிண்டலடிக்கிறார்கள். இந்நிலையில் 7 மாதத்தில் 7 கேப்டன்கள் என்பது நல்ல நிலைமை அல்ல என்பதை ஒப்புக்கொண்டுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவை அனைத்தும் கட்டுப்படுத்த முடியாத அல்லது எதிர்பாராத காரணங்களால் ஏற்பட்டதாக பதிலளித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இவ்வளவு குறுகிய காலத்தில் வெவ்வேறு 7 கேப்டன்களை வைத்திருப்பது சிறந்ததல்ல என்பதை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவை அனைத்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நடந்தது. தென்னாப்பிரிக்க வெள்ளை பந்து தொடரை வழிநடத்த ரோகித்சர்மா தயாராக இருந்தபோது காயமடைந்தார். அதனால் ஒருநாள் மற்றும் சமீபத்திய தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவரும் ஒருநாள் முன்பாக காயத்தால் வெளியேறினார்” என்று கூறினார்.

dravid

இப்படி எதிர்பாராத தருணங்களில் கேப்டன்கள் மாறியதை பிசிசிஐ கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கும் சௌரவ் கங்குலி இந்த வெவ்வேறு கேப்டன்களுடன் இணைந்து பணியாற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நினைத்தால் தான் கவலையாக இருப்பதாக தெரிவிக்கிறார். ஏனெனில் நிலையான கேப்டன் இருந்தால் தான் அவருடன் ஒரு பயிற்சியாளராக நீண்டகால திட்டங்களை ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாண்டு வகுக்க முடியும். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் திடீரென ரோகித் சர்மா விலகும் நிலை ஏற்பட்டதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. இந்த வருட கேலண்டரில் நாம் சிலருக்கு ஓய்வளித்த நிலையில் சிலர் காயத்தால் வெளியேறினர். மேலும் சில வீரர்களின் பணிச்சுமையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது பரிதாபப்பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒவ்வொரு தொடரிலும் அவருடன் புதிய கேப்டன்கள் செயல்படுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement