வார்னர் மாதிரி இவரையும் பெஞ்சில் அமரவைக்க இதுவே நல்ல நேரம் – ஹைதெராபாத் அணிக்கு சேவாக் ஆலோசனை

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 14-ஆம் தேதி நடைபெற்ற 61-வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்ட கொல்கத்தா 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் கட்டாயம் வென்றே தீரவேண்டும் என்ற நியலையில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் 177/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 99/5 என தவித்தபோது களமிறங்கி சுழன்றடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 3 பவுண்டரி 4 சிக்சருட்ன 49* (28) ரன்கள் எடுத்து அதிரடி பினிஷிங் கொடுத்தார்.

KKR vs SRH Tim Southee

- Advertisement -

அவருடன் சாம் பில்லிங்ஸ் முக்கியமான 34 (29) ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக 43 (28) ரன்கள் எடுக்க மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்ரம் 32 (25) ரன்கள் எடுத்தார்.

ஹைதெராபாத் பரிதாபம்:
ஆனால் அவர்களுக்கு கைகொடுக்க வேண்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 9 (17) ராகுல் திரிப்பாதி 9 (12) நிகோலஸ் பூரான் 2 (3) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியதால் 20 ஓவர்களில் 123/8 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியால் பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

மறுபுறம் இந்த சீசனில் முதல் 2 தோல்விகளால் கடைசி இடத்தில் திணறிய ஹைதராபாத் அதன்பின் வரிசையாக 5 வெற்றிகளைப் பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைந்தது. ஆனால் அதன்பின் நேற்றுடன் வரிசையாக 5 தோல்விகளை பெற்று 12 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் பிரகாசமாக இருந்த அந்த அணியின் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு மந்தமாகியுள்ளது. இப்போட்டியில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 17 பந்துகளில் 9 ரன்களை 52.94 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

சொதப்பும் வில்லியம்சன்:
இது மட்டுமல்லாமல் இந்த வருடம் ஆரம்பம் முதலே ஆமை வேகத்தில் பேட்டிங் செய்யும் அவர் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்கிறோம் என்பதை மறந்துவிட்டு தொடர்ச்சியாக டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி வருவது அந்த அணியின் இந்த பரிதாப நிலைமைக்கு முக்கிய காரணமாகும். இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 208 ரன்களை 92.86 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் குறைந்தது 100 பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன்களில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டவராக உள்ளார்.

sehwag

இத்தனைக்கும் இவரை நம்பி காலம் காலமாக பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து 2016 சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த டேவிட் வார்னர் ஒரு வருடம் சொதப்பினார் என்பதற்காக ஹைதராபாத் அணி நிர்வாகம் அவமானப்படுத்தி கழற்றிவிட்டது. ஆனால் 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட வில்லியம்சன் அந்தப் பொறுப்பை உணராமல் செயல்பட்டு வருவதால் வார்னரை எப்படி பெஞ்சில் அமர வைத்தார்களோ அதேபோல் இவரையும் பெஞ்சில் அமர வைக்க இதுவே சரியான தருணம் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ஹைதராபாத் அணிக்கு நியாயமான ஆலோசனை வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி நேற்றைய போட்டிக்குப் பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு அணியின் கேப்டன் சிறப்பாக செயல்படவில்லையெனில் எப்படி அந்த அணியால் மட்டும் வெற்றிக்காக போராடும் முடியும். கேன் வில்லியம்சன் தேவையான ரன்களை அதுவும் அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க வேண்டும். அவரின் ஓப்பனிங் பார்ட்னர் அபிஷேக் சர்மா பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டார். ஆனால் அவருக்கு எதிர்ப்புறத்தில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை”

kane williams

“கேன் வில்லியம்சன் நிச்சயமாக கேப்டன்சிப் பதவியை வேறு ஒருவரிடம் வழங்கிவிட்டு பிரேக் எடுக்க வேண்டும். இல்லையென்றாலும் அவரை அணியிலிருந்து நீக்குவதற்கு இதுவே சரியான தருணம். அவர் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் மாறவில்லை. மாறாக சீக்கிரமே அவுட்டான அவரைத் தொடர்ந்து இதர வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. நீங்கள் வெற்றி பெறுவதற்கு 40 ஓவர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : அட நம்ம புஜாரா! ஐபிஎல் 2022 தொடரில் 14 கோடிக்கு விளையாடுறாரு – வெளிநாட்டு வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

அதாவது 2015 – 2020 வரை அற்புதமாக செயல்பட்ட வார்னரை கடந்த 2021 ஒரு சீசனில் சொதப்பினார் என்பதற்காக பெஞ்சில் அமர வைத்த ஹைதராபாத் நிர்வாகம் தற்போது அவரைப்போலவே சொதப்பும் வில்லியம்சனை பெஞ்சில் அமர வைக்க இதுவே சரியான தருணம், அதுவே சரியான நியாயம் என்று சேவாக் கூறியுள்ளார். மேலும் எஞ்சிய போட்டிகளில் ஹைதராபாத் வெல்ல வேண்டுமெனில் வில்லியம்சன் தாமாக முன்வந்து கேப்டன்ஷிப் பதவியை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement