அட நம்ம புஜாரா! ஐபிஎல் 2022 தொடரில் 14 கோடிக்கு விளையாடுறாரு – வெளிநாட்டு வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்சகட்ட பரபரப்பில் மும்பை நகரில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மே 14-ஆம் தேதி நடைபெற்ற 61-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் சந்தித்தன. புனேவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் போராடி 177/6 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 7 (6) அஜிங்கிய ரகானே 28 (24) நிதிஷ் ராணா 26 (16) என முக்கிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்காமல் ஏமாற்றிய நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 15 (9) ரிங்கு சிங் 5 (6) ஆகியோரும் மிடில் ஆர்டரில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

Andrew Russell49

- Advertisement -

அதனால் 150 ரன்களை கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் தனக்கே உரித்தான காட்டடி பாணியில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார். அவருடன் சாம் பில்லிங்ஸ் முக்கியமான 34 (29) ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஹைதெராபாத் தோல்வி:
அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 9 (17) ராகுல் திரிபாதி 9 (12) ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுபுறம் அதிரடி காட்டிய இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனால் ஏற்பட்ட சரிவின் போது ஐடன் மார்க்ரம் அதிரடியாக 3 சிக்சருடன் 32 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 2 (3) வாசிங்டன் சுந்தர் 4 (9) ஆகியோரும் வரிசையாக வந்த வாக்கிலேயே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.

KKR vs SRH Tim Southee

இறுதியில் 20 ஓவர்களில் 123/8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதெராபாத் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் கண்டிப்பாக வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வை கண்ட கொல்கத்தா பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியதுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 49 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் எடுத்து தனி ஒருவனாக ஆல்-ரவுண்டராக மிரட்டிய ஆன்ரே ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ஆமைவேக வில்லியம்சன்:
மறுபுறம் இந்த வருடம் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று கடைசி இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதன்பின் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைந்து அசத்தியது. ஆனால் அதன்பின் நேற்றுடன் சேர்த்து தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி 12 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து 8-வது இடத்தை பிடித்து மீண்டும் திணறுகிறது. இதனால் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல 90% வாய்ப்பு குறைவாகும். அந்த அணியின் இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு பேட்டிங்கில் அதன் கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக பேட்டிங் செய்வது முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

williamson 1
Kane Williamson

நேற்றைய முக்கியமான போட்டியில் கூட 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 9 ரன்களை 52.94 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது தோல்விக்கு பங்காற்றியது. இந்த ஒரு போட்டியில் மட்டும் தான் அப்படியா என்று பார்த்தால் இந்த வருடம் அவர் களமிறங்கிய அத்தனை போட்டிகளிலுமே இதேபோல டெஸ்ட் பேட்டிங் செய்து வருகிறார். அதற்கு ஆதாரமாக இதுவரை அவர் பங்கேற்ற 12 போட்டிகளில் வெறும் 208 ரன்களை 18.91 என்ற மோசமான சராசரியில் 92.86 என்ற படுமோசமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
இந்த 92.86 ஸ்ட்ரைக் ரேட் என்பது இந்த வருட ஐபிஎல் தொடரில் குறைந்தது 100 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் மிக மிகக் குறைவானதாகும். அந்த பட்டியல் இதோ:
1. கேன் வில்லியம்சன் : 92.86
2. அஜிங்கிய ரகானே : 103.91
3. கைரன் பொல்லார்ட் : 107.46

இத்தனைக்கும் இவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கையிலேயே காலம் காலமாக ரன் மழை பொழிந்து 2016இல் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த டேவிட் வார்னரை கடந்த வருடம் அவமானப்படுத்தி ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

இதையும் படிங்க : மீண்டும் தனி ஒருவனாக கொல்கத்தாவை காப்பாற்றிய ஆண்ட்ரே ரசல் – 2 புதிய வரலாற்று சாதனை

ஆனால் 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவை விட மோசமாக ஐபிஎல் 2022 தொடரில் விளையாடினால் எப்படி இருக்குமோ அதே போல் பேட்டிங் செய்வதாக பல ரசிகர்களும் விதவிதமாக அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement