அதற்காக எல்லாரும் வருத்தப்படுறாங்க ஆனால் அது என் மனதில் ரெக்கார்ட் ஆகிடுச்சு – ஜாம்பவான் கபில் தேவ்

kapil
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் கபில் தேவ் வரலாற்றிலேயே இந்தியா கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர் என்றால் மிகையாகாது. கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் முறையாக விளையாடத் துவங்கிய போது ஒரு சாதாரண அணியாக இருந்த இந்தியா அவர் ஓய்வு பெற்ற 1994-ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கிய அணியாக உருவெடுத்தது. அந்த அளவுக்கு தனது அபார திறமையால் ஒரு ஆல்-ரவுண்டராக இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5000+ ரன்கள் மற்றும் 400+ விக்கெட்களை எடுத்த உலகின் ஒரே மகத்தான ஆல்-ரவுண்டராக மாபெரும் சாதனை படைத்தவர்.

kapil dev 1

- Advertisement -

மகத்தான கேப்டன் கபில் தேவ்:
சொல்லப்போனால் அவருக்குப் பின்பு இந்தியாவில் இதுவரை ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைக்கவே இல்லை என்பதே அவரின் திறமைக்கும் தரத்திற்கும் எடுத்துக்காட்டாகும். அதேபோல் கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த அவரால் தான் இன்று இந்தியாவில் கிரிக்கெட் எனும் விளையாட்டு ஆழமாக ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு விதைக்கப்பட்ட முதல் விதையாகும்.

கடந்த 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் 3-வது உலக கோப்பையில் ஒரு சில தரமான வீரர்கள் மட்டும் அடங்கிய இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய கபில் தேவ் 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று 80களில் அசுரனாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப்போட்டியில் தோற்கடித்து இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். அவரைப் பார்த்துதான் நாளடைவில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட எத்தனையோ இளம் வீரர்கள் உருவாகி இந்தியாவை உலக அரங்கில் ஜொலிக்க வைத்தனர். அதனால் இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் அவருக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது.

kapil dev

கவலைப்படவில்லை:
இப்படி அனைத்தையும் சாதித்த அவரின் கிரிக்கெட் கேரியரில் ஒரு குறை என்னவெனில் அவரின் அதிகபட்ச ஸ்கோரான 175* இன்னிங்ஸ் போட்டி மட்டும் வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. அதற்காக நிறைய ரசிகர்களும் வல்லுனர்களும் வருத்தப்படும் நிலையில் அதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “எனது சிறந்த இன்னிங்ஸ் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அதற்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இன்றும் கூட அந்த தருணங்கள் பதிவு செய்யப் படாமல் போனததற்காக நீங்கள் வருத்தப் படவில்லையா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு இல்லை என நான் பதில் கூறுகிறேன். ஏனெனில் அந்த இன்னிங்ஸ் எனது மனதிலும் எண்ணத்திலும் மிகவும் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

- Advertisement -

அதாவது கடந்த 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் விளையாடிய இந்தியா ஆரம்பத்திலேயே சீட்டுக்கட்டு சரிவது போல தங்களது விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. இதனால் 9/4 என தடுமாறிய இந்தியாவின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் களமிறங்கிய கபில்தேவ் அன்றைய நாளில் விஸ்வரூபம் எடுத்து யாரும் எதிர்பாராத வண்ணம் ஜிம்பாவே பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தார்.

kapil-dev

மொத்தம் 138 பந்துகளை எதிர்கொண்ட அவர் 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர் உட்பட அந்த காலத்திலேயே டி20 ஆட்டத்தை போல அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் விளாசி 175* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் காரணமாக 60 ஓவர்களில் 266/8 ரன்களை எடுத்த இந்தியா அதன்பின் சிறப்பாக பந்துவீசி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

தரமான 175*:
இந்திய அணியில் இருந்த இதர வீரர்கள் கூட தோல்வி உறுதி என நினைத்த வேளையில் தனி ஒருவனாக இந்தியாவை தூக்கி நிறுத்திய கபில்தேவ் பெற்றுக் கொடுத்த அந்த வெற்றி தான் அந்த உலகக் கோப்பையை நம்மால் வெல்ல முடியும் என்ற உத்வேகத்தை எஞ்சிய 10 வீரர்களின் மனதில் ஏற்படுத்தியது. அந்த உத்வேகத்தால் அதன்பின் அபாரமாக செயல்பட்ட இந்தியா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இது பற்றி சமீபத்தில் வெளியான அவரின் 83 திரைப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

83

மேலும் அந்த 175* ரன்கள் என்பது கடந்த 1999 வரை ஒருநாள் மற்றும் உலக கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய வீரர் மற்றும் கேப்டனின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அப்படிப்பட்ட அந்த மகத்தான இன்னிங்ஸ் துரதிஷ்டவசமாக வீடியோ வடிவில் பதிவு செய்யப்படாமல் போனது. அன்றைய நாளில் அந்த போட்டிகளை பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பிபிசி ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்ட்ரைக் செய்த காரணத்தால் அந்த இன்னிங்ஸ் பதிவுசெய்யப்படவில்லை.

இதையும் படிங்க : எங்களின் குட்டி ஏபிடி இவர்தான் ! கேஎல் ராகுல் பாராட்டும் 20 லட்சம் சாதனை இளம் இந்திய வீரர் யார் தெரியுமா

அதனால் அந்தப் போட்டியை களத்திலிருந்து பார்க்காத முடியாத இந்திய ரசிகர்களுக்கும் இன்றைய இளம் ரசிகர்களுக்கும் இன்றும் கூட அது ஒரு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இருப்பினும் அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதால் அதை பற்றி கவலைப்படவில்லை என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Advertisement