எங்களின் குட்டி ஏபிடி இவர்தான் ! கேஎல் ராகுல் பாராட்டும் 20 லட்சம் சாதனை இளம் இந்திய வீரர் யார் தெரியுமா

Ayush Badoni 2
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரின் 3-வது நாளில் நடைபெற்ற போட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த பரபரப்பான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்த குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

LSG vs GT

- Advertisement -

கவனம் ஈர்த்த இளம் ஆயுஷ் படோனி:
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ராகுல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க அடுத்ததாக குவின்டன் டி காக் 7, மணிஷ் பாண்டே 6, எவின் லெவிஸ் 10 என டாப் 4 வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது களமிறங்கிய தீபக் ஹூடா உடன் ஜோடி சேர்ந்த இளம் இந்திய வீரர் ஆயுஷ் படோனி தனது அபார திறமையால் சரிந்த லக்னோ அணியை மீட்டெடுத்தார் என்றே கூறலாம்.

ஏனெனில் முதல் முறையாக ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டியில் களமிறங்கிய அவர் தனது அணி 29/4 என தடுமாறுவதை கண்டு அஞ்சாமல் பொறுமையுடனும் நிதானத்துடனும் அதேசமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்தார்.

Ayush Badoni

குறிப்பாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் அதிரடி பந்துகளை வீசும் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் லாக்கி பெர்குசன் வீசிய ஒரு பந்தை அசால்டாக சிக்சர் அடித்த அவர் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் ஓவரிலும் இமாலய சிக்சரை பறக்க விட்டார். இதனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர் 41 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடியாக விளையாடிய தீபக் ஹூடா தன் பங்கிற்கு 41 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உட்பட 55 ரன்கள் எடுத்தார். இவர்களின் அபாரமான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் 100 ரன்களை தொடுமா என தள்ளாடிய லக்னோ 20 ஓவர்களில் 158/6 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணி ராகுல் தேவாடியா 40* (24), டேவிட் மில்லர் 30 (21), ஹர்டிக் பாண்டியா 33 (28) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் இறுதியில் எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

குட்டி ஏபிடி:
இந்த முதல் போட்டியில் லக்னோ தோற்ற போதிலும் ஆரம்பத்தில் தடுமாறிய வேளையில் கைகொடுத்த இளம் வீரர் ஆயுஷ் படோனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். குறிப்பாக எங்கள் அணிக்கு குட்டி ஏபி டீ வில்லியர்ஸ் கிடைத்து விட்டார் என அந்த இளம் வீரரை லக்னோ அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திரம் கேஎல் ராகுல் வெளிப்படையாக பாராட்டி நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தார்.

rahul 1

இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் கேஎல் ராகுல் பேசியது பின்வருமாறு. “அவர் (படோனி) எங்களுக்கு ஒரு குட்டி ஏபி டிவில்லியர்ஸ் ஆவார். முதல் நாளிலிருந்தே அவர் அபாரமாக செயல்படத் தொடங்கியுள்ளார். ஒரு சிறிய பையனாக இருக்கும் அவர் அதிரடியாக விளையாடி மைதானத்தின் 360 டிகிரிகளிலும் விளையாடினார். அவருக்கு அளிக்கப்பட்ட முதல் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் 4 விக்கெட்டுகள் இழந்து ஆரம்பத்திலேயே தடுமாறிய ஒரு சூழ்நிலையில் அவர் விளையாடி பழக்கப்பட்டவர் அல்ல. ஆனாலும் அந்த அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதை அவர் தொடர்ந்து செய்வார் என நம்புகிறேன்” என்று பாராட்டினார்.

- Advertisement -

அவர் பாராட்டியது போல நேற்றைய போட்டியில் லாக்கி பெர்குசன், ரசித் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை அசால்டாக எதிர் கொண்ட அவர் மைதானத்தின் நாலா புறங்களிலும் ரன்களை குவித்தார். அவரின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் போல விளையாடுகிறார் என சமூக வலைதளங்களில் பாராட்டிய நிலையில் கேஎல் ராகுல் போன்ற ஒரு நட்சத்திர வீரர் நேரடியாகவே பாராட்டியது உண்மையாகவே அவரின் திறமையை காட்டுகிறது.

Ayush Badon Deepak Hooda

யார் இந்த சாதனை படைத்த படோனி:
தனது அறிமுக போட்டியிலேயே 6-வது இடத்தில் களமிறங்கி 54 ரன்கள் குவித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே 6 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சூப்பரான சாதனையையும் படைத்தார். தற்போது 22 வயது மட்டுமே நிறைந்த டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷ் படோனி உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக சமீப காலங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் மறைந்த டெல்லியைச் சேர்ந்த ஜாம்பவான் பயிற்சியாளர் டரக் சின்ஹாவின் கடைசி பேட்ச் மாணவரான இவர் ரிஷப் பண்ட் போன்ற தரமான வீரர்களை உருவாக்கிய டரக் சின்ஹாவிடம் பயிற்சிகளைப் பெற்றவர். கடந்த 2018-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அசத்திய இவர் 185 ரன்கள் விளாசினார்.

இதையும் படிங்க : பாதியிலேயே காலைவாரும் வெளிநாட்டு வீரர்கள் – எஸ்கேப் ஆவதை தடுக்க பிசிசிஐ ஸ்ட்ரிக்ட் ரூல்

அதன்பின் துபாயில் நடந்த அண்டர்-19 ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 28 பந்துகளில் 52* ரன்கள் விளாசிய அவர் அந்தத் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இப்படி படிப்படியாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இவரை லக்னோ அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தொடர்ந்து கவனித்து வந்தார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இவர் தற்போது தனது அபார திறமையால் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளார் என்பது பாராட்டத்தக்க அம்சமாகும்.

Advertisement