- Advertisement -
உலக கிரிக்கெட்

அசாத்தியம் கிடையாது ஆனால் ! சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைப்பது பற்றி சுனில் கவாஸ்கரின் பதில் இதோ

நியூசிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் முன்னாள் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது டெஸ்ட் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி கடந்த ஜூன் 10-ஆம் தேதியன்று டிரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுகிறோம் என அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அபார பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் சதமடித்து 190 ரன்கள் எடுக்க அவருடன் பேட்டிங் செய்த டாம் ப்ளன்டல் சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சச்சினை நோக்கி ரூட்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 539 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் ஓலி போப் சதமடித்து 145 ரன்கள் எடுக்க அவரைவிட அபாரமாக பேட்டிங் செய்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சதமடித்து 176 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 12-ஆவது பேட்ஸ்மேன் என்ற இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.

சமீப காலங்களாகவே அற்புதமாக பேட்டிங் செய்து வரும் அவர் கடந்த ஒரு வருட காலத்திற்குள் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகின் இதர தரமான பேட்ஸ்மேன்களை காட்டிலும் 10 சதங்களை அடித்து முரட்டுத்தனமான பார்மில் எதிரணிகளை மிரட்டி வருகிறார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 115 ரன்களை அடித்து அவர் இளம் வயதில் 10000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முறியடித்து அலெஸ்டர் குக் உலக சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

அசாத்தியம் கிடையாது:
இப்படி அடுத்தடுத்த சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து வரும் அவர் தற்போது 31 வயது மட்டுமே கடந்துள்ளதால் இன்னும் 4 – 5 விளையாடுவார் என்பதால் 15921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இந்திய ஜாம்பவான் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவரைத் தவிர தற்போது உலகில் வேறு யாரும் 10000 ரன்களை தொடவில்லை. மேலும் ஏற்கனவே அந்த சாதனையை உடைப்பார் எனக் கருதப்பட்ட அலஸ்டேர் குக் 34 வயதிலேயே ஓய்வு பெற்று செய்த தவறை ஜோ ரூட் செய்யமாட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சச்சின் சாதனையை முறியடிப்பது அசாத்தியம் கிடையாது என்று கூறியுள்ள இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதைத் தொடுவது கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது ஒரு கடக்க முடியாத சாதனையாகும். ஏனெனில் அடுத்ததாக கிட்டத்தட்ட 6000 ரன்களை பற்றி நாம் பேசுகிறோம். அதாவது அடுத்த 8 வருடங்களில் 1000 அல்லது 800 ரன்களை அடித்தால்தான் அதைத் தொட முடியும்”

- Advertisement -

“ஜோ ரூட்டுக்கு அவரின் வயது சாதகமாக உள்ளது. ஒருவேளை தற்போதுள்ள ஆர்வத்தை அப்படியே மெயின்டென் செய்தால் அதை அவரால் உடைக்க முடியும். ஆனால் தற்போது தொடர்ச்சியாக 150க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கும் அவருக்கு அது மனதளவிலும் உடலளவிலும் ஒரு பாரத்தை ஏற்படுத்தியிருக்கும். விளையாட்டில் அனைத்தும் சாத்தியமானது. முதலில் நாம் முறியடிக்க முடியாது என நினைத்த ரிச்சர்ட் ஹாட்லீ 431 விக்கெட்டுகளை கடந்தோம். பின் கோர்ட்டினே வால்ஷ் 519 விக்கெட்டுக்களை பற்றி நினைத்தோம். எனவே அது அசாத்தியம் கிடையாது. ஆனால் மிக மிகக் கடினமான ஒன்றாகும்” என்று கூறினார்.

அதாவது தற்போது ஜோ ரூட் 100, 150 ரன்களை அசால்டாக அடிப்பதாக நாம் நினைப்போம். ஆனால் அது அவரின் மனதிலும் உடலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறும் சுனில் கவாஸ்கர் 34 – 35 வயதை தொடும் போது அது உச்சத்தை எட்டி களைப்பை கொடுத்து தற்போது விராட் கோலி தவிக்கும் நிலைமையை போன்றதொரு சூழலை ஏற்படுத்த வல்லது என்று தெரிவிக்கிறார். ஒருவேளை அதையும் தாண்டி இப்போது இருக்கும் ஆர்வத்தை போலவே தொடர்ச்சியாக பேட்டிங் செய்தால் அதை தொடுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 – 2027 ஒளிபரப்பு உரிமம் ! வாங்கியது யார், எத்தனை கோடி, ரசிகர்கள் இனி எதில் பார்க்கலாம்?

2019இல் 31 வயதில் 70 சதங்களை அடித்த விராட் கோலி சச்சினின் 100 சதங்கள் சாதனை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறும் நிலைமை ஜோ ரூட்டுக்கு ஏற்பட்டால் சச்சினை தொடுவது அசாத்தியமாகி விடும். எனவே அடுத்த 4 – 5 வருடங்கள் எவ்வித காயத்தையும் சந்திக்காமல் இதே பார்மில் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை அடித்து சச்சினின் சாதனையை உடைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -
Published by