ஐபிஎல் கோப்பையை கூட ஈசியா வாங்கிடலாம் ஆனால் இதை செய்வது ரொம்ப கஷ்டம் – ட்வயன் ப்ராவோ

Bravo
- Advertisement -

உலகப்புகழ் புகழ்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த வருடம் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மேலும் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

IPL

- Advertisement -

இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிக்குப் பின் தயாராக உள்ளன. இந்த வருடத்தின் ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்குள் நேரடியாக சென்று பார்ப்பதற்காக 25% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா சென்னை:
இதுவரை 4 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் அபாரமாக செயல்பட்டு 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்த தொடரில் களமிறங்க உள்ளது. இருப்பினும் அந்த அணிக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இந்த தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து விலகியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தலைமையில் தான் அந்த அணி இதுவரை 4 கோப்பைகளையும் வென்றுள்ளது.

Jadeja

இருப்பினும் தற்போது 40 வயதை கடந்த விட்டதன் காரணமாக சென்னையின் வருங்காலத்தை கருத்தில் கொண்ட எம்எஸ் தோனி தனது கேப்டன் பதவியை மற்றொரு முக்கிய வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடுகிறார். மறுபுறம் இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜா இதற்கு முன் பெரிய அளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவர். எனவே அவர் தலைமையில் சென்னை அணியால் கோப்பையை தக்க வைக்க முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

ரொம்ப கஷ்டம்:
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது கூட சுலபமானது ஆனால் அதை தக்க வைப்பது என்பது மிகவும் கடினமான செயல் என்று சென்னை அணிக்காக காலம் காலமாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நட்சத்திரம் ட்வயன் ப்ராவோ தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக நாங்கள் முழு முயற்சியை போடுகிறோம். எப்போதெல்லாம் நாங்கள் கோப்பையை வெல்கிறோமோ அப்போதெல்லாம் அதை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். இருப்பினும் ஐபிஎல் என்பது உலகிலேயே மிகவும் கடினமான டி20 தொடராகும்.

bravo

அதில் கோப்பையை தக்க வைப்பது என்பது எப்போதும் சவாலான ஒன்றாகும். சொல்லப்போனால் ஐபிஎல் கோப்பையை வெல்வது எளிதானது. ஆனால் அதை தக்க வைப்பது மிகவும் கடினம். இந்த முறை எங்கள் அணியில் அனுபவம் கலந்த இளமை நிறைந்துள்ளதால் சம பலத்துடன் உள்ளது. ஆனால் முன்பு கூறியது போல கோப்பையை தக்க வைப்பது கடினமான ஒன்று என்றாலும் எங்களால் முடிந்த அனைத்தையும் அதற்காக கொடுக்க உள்ளோம்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல ஐபிஎல் போன்ற ஒரு மிகப்பெரிய கடினம் நிறைந்த தொடரில் சாம்பியன் பட்டம் கூட எளிதாக வென்று விடலாம் ஆனால் அந்த அந்தஸ்தை மறுபடியும் தக்க வைப்பது மிக மிக கடினமாகும். இதற்கு முன் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்ற சென்னை 2011-ஆம் ஆண்டு மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. அதன்பின் கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது. இந்த 2 அணிகளை தவிர ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணிகளும் கோப்பையை தக்க வைத்ததே கிடையாது.

இதையும் படிங்க : முதல் போட்டியிலேயே லக்னோ தோல்வி – ஐபிஎல் வரலாற்றின் மோசமான ஜெர்ஸி, கடுப்பான ரசிகர்கள்

அந்த வேளையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜா பற்றி பிராவோ பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அவரின் கிரிக்கெட் கேரியரில் உச்சத்தில் இருக்கிறார். தோனிக்கு பின் இந்த இடத்திற்கு அவர் வருவதற்கு தகுதியானவர். அவருக்கு சென்னை அணியில் விளையாடும் நாங்கள் அனைவரும் 100% ஒத்துழைப்பை கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக வெற்றிநடை போட செய்வோம்” என கூறினார். மேலும் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதால் எம்எஸ் தோனியுடன் மிகுந்த நெருங்கிய நட்பை வைத்துக் கொண்டுள்ளதாக ப்ராவோ கூறினார். மேலும் அந்த அணிக்கு சமீப காலங்களாக ஜொலிக்க தொடங்கியுள்ள ருதுராஜ் கைக்வாட் வருங்காலங்களில் சூப்பர் ஸ்டாராக வருவார் என ப்ராவோ பாராட்டியுள்ளார்.

Advertisement