வெ.இ அணியை இங்கிலாந்து அவமான படுத்திவிட்டது, முதல் டெஸ்ட் முடிவில் கொந்தளித்த வெ.இ வீரர் – என்ன நடந்தது?

West indies vs england
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று ஆண்டிகுவா நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது.

bairstow 2

- Advertisement -

ஒரு கட்டத்தில் 115/5 என திணறிய இங்கிலாந்துதை சதமடித்து காப்பாற்றிய ஜானி பேர்ஸ்டோ 140 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெயடேன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டு தனது முதல் இன்னிங்சில் 375 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 355 பந்துகள் சந்தித்து 123 ரன்கள் விளாசிய நிக் போன்னேர் தனது அணியை காப்பாற்றியதுடன் 64 ரன்கள் முன்னிலை பெற்றுக்கொடுத்தார்.

அதை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து ஜாக் க்ராவ்லி 121 ரன்கள் மற்றும் கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் என அடுத்தடுத்து சதம் அடித்ததால் 349/6 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இறுதியில் 286 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இங்கிலாந்தின் அதிரடியான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 67/4 என அந்த அணி தோல்வியின் பிடியில் சிக்கியது.

root

ட்ராவில் முடிந்த பரபரப்பான டெஸ்ட்:
கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ் சொதப்பியதால் இங்கிலாந்தின் வெற்றி உறுதி என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஜோடி சேர்ந்த நிக் போன்னேர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அப்படியே நங்கூரம் போல 2 புறங்களிலும் நின்று தடுப்பாட்டம் ஆடினார்கள். கடைசி ஒரு சில மணி நேரங்களில் இவர்களை அவுட் செய்ய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எடுத்த அத்தனை முடிவுகளும் தோல்வியடைந்த நிலையில் கடைசி நாளின் கடைசி ஒவரின் முதல் பந்தை வீசிய இங்கிலாந்து 5 பந்துகள் மீதம் இருந்த போது ட்ரா செய்ய ஒப்புக்கொண்டது.

- Advertisement -

இதனால் வெற்றியை தடுத்து நிறுத்தி களத்தில் இருந்த போன்னேர் 38*, ஜேசன் ஹோல்டர் 37* ஆகியோரிடம் கை கொடுத்த இங்கிலாந்து வீரர்கள் போட்டியை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்பினார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இந்த போட்டியில் கடைசி ஒருசில மணி நேரத்தில் இங்கிலாந்தின் வெற்றி உறுதியான போதிலும் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் போனது. அந்த கடுப்பில் கடைசி ஓவரின் எஞ்சிய 5 பந்துகளை எதற்காக வீச வேண்டும் என நினைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் போட்டியை முடித்துக் கொள்வதற்கு ஒப்புக்கொண்டார்.

wi vs eng

அவமான படுத்திவிட்டது:
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அதன் கேப்டன் ஜோ ரூட் செய்த இந்தச் செயல் வெஸ்ட்இண்டீஸ் அணியை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக அந்த அணியின் மற்றொரு வீரர் கார்லஸ் ப்ரேத்வைட் கொந்தளித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணியில் நான் ஒரு சீனியர் வீரராக இப்போட்டியில் இடம் பிடித்து இருந்தால் இதை ஒரு அவமானமாக கருதி இருப்பேன்.

- Advertisement -

ஏனெனில் கடைசி ஒரு மணி நேரத்தில் பிட்ச்சில் எந்தவித உதவியும் கிடைக்காத வேளையில் எங்களின் 2 பேட்ஸ்மேன்களும் நன்கு செட்டான பின் எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் எடுக்க முடியும் என இங்கிலாந்து நினைத்தது. ஆனால் கடைசி 5 பந்துகள் மீதம் இருந்த வேளையில் போட்டியை முடித்துக் கொள்வதாக கைகொடுத்தது.

Carlos Brathwaite 2016 t20 world cup

“இதுவே ஒரு ஆஷஸ் போட்டியாக இருந்திருந்தால் இங்கிலாந்து இதை செய்திருக்குமா? இதுவே இந்தியா, நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிராக அவர்கள் இதை செய்திருப்பார்களா? என்னைப் பொறுத்தவரை கண்டிப்பாக அப்படி செய்திருக்க மாட்டார்கள் என்பதே இந்த கேள்விக்கான எனது பதிலாகும். அப்படி இருக்க எங்களுக்கு எதிராக மட்டும் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்?” என கேள்வியை எழுப்பினார்.

இதையும் படிங்க : 22 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தி – ரிஷப் பண்ட் அசத்தல்

அதாவது வெற்றியை தடுத்து நிறுத்திய வெஸ்ட் இண்டீஸ் அந்த கடைசி 5 பந்துகளை எதிர்கொள்ள தகுதியற்றவர்கள் என்பது போல இங்கிலாந்து நடந்து கொண்டதாக கார்லஸ் ப்ரேத்வைட் கோபமாக பேசினார். வெற்றிக்காக 5 நாட்கள் விளையாடிய இங்கிலாந்து அந்த 5 பந்துகளையும் விளையாடி விட்டு சென்றிருக்க வேண்டும் என்பதே நியாயமான செயல் என அவர் கூறினார்.

Advertisement