தரமான கிரிக்கெட் அல்ல, ஐபிஎல் என்பது முழுவதும் வியாபாரமாகிடுச்சு – முன்னாள் பாக் வீரர் அதிருப்தி கருத்து

IPL
- Advertisement -

கடந்த மார்ச் 26 முதல் மே 29 வரை நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பரபரப்பான போட்டிகளுடன் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் குஜராத், லக்னோ ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்வதற்கு முன்பை விட கடுமையான போட்டி காணப்பட்ட நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அசத்தியது. கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத முடிவுகளைக் கொடுக்கும் போட்டிங்களாக அமைவதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை விட ஐபிஎல் தரமான தொடர் என்று சுனில் கவாஸ்கர், ஏபி டிவிலியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டும் அளவுக்கு தரத்தை கண்டுள்ளது. அதேபோல் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்லா கட்டும் பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது.

விரிவாகும் ஐபிஎல்:
மேலும் நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறக்கும் ஐபிஎல் தொடரை பார்த்துவிட்டு பெரும்பாலான சமயங்களில் இந்தியா – இலங்கை போன்ற அணிகள் மோதும் தரமற்ற சர்வதேச டி20 போட்டிகள் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைவதால் அதை கால்பந்தை போல உலக கோப்பையாக மட்டும் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தி விட்டு எஞ்சிய தருணங்களில் 2 ஐபிஎல் அல்லது பெரிய ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை 2023 – 2027 காலகட்டத்திற்காக சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது.

IPL 2022

 

- Advertisement -

ஆம் 48,390 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கிய டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 3 நிறுவனங்களிடம் அந்த காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ உறுதியளித்துள்ளது. அதாவது 2025 முதல் 84, 94 கொண்ட போட்டிகளாக ஐபிஎல் விரிவடைய உள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அதில் வெளிநாட்டு வீரர்கள் தடையின்றி பங்கேற்பதற்காக ஐசிசி கால அட்டவணையில் (எஃப்டிபி) மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐபிஎல் வியாபாரம்:
இந்த ஒளிபரப்பு ஏலத்தால் 107.5 கோடி என ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து ஈபிஎல், எம்பிஎல், என்பிஏ போன்ற அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு தொடர்களை முந்தியுள்ள ஐபிஎல் தற்போது அதிக வருமானத்தை கொடுக்கும் உலகின் 2-வது விளையாட்டு தொடராக பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல் நாட்டுக்காக 1 வருடம் விளையாடினால் 1 கோடி சம்பளமாக கிடைக்காத நிலையில் இந்த தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு 5, 10 என கோடிக்கணக்கில் சம்பளம் கிடைப்பதால் சமீப காலங்களில் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட நிறைய வீரர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

- Advertisement -

latif

இந்நிலையில் ஐபிஎல் என்பது தரமான கிரிக்கெட் தொடர் என்பதை தாண்டி முழுக்க முழுக்க வியாபாரமாக மாறி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதீப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் (ஒளிபரப்பு உரிமை) கிரிக்கெட்டை சம்பந்தப்பட்டதல்ல, வியாபாரத்தை அடிப்படையானது. இது கிரிக்கெட்டுக்கு உகந்த சூழ்நிலை அல்ல. நாம் பணம் கொடுக்க வேண்டுமென்றால் பலர் பணம் சம்பாதிக்கிறார்கள். இது கிரிக்கெட்டின் தரத்தை பற்றியதல்ல, முற்றிலும் வணிகமாக மாறியுள்ளது”

“இந்தியர்களை அழைத்து அவர்களிடம் நீங்கள் எத்தனை மணிநேரங்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். இது (ஐபிஎல்) பிஸ்னஸ் என்பதால் நான் எதையும் கூறவிரும்பவில்லை. இந்த வணிகத்திற்கு என்ன பெயர் வைத்தாலும் அது வணிகம் மட்டுமே. இது எந்த அளவுக்கு தாங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்று கூறினார்.

Ganguly-ipl
IPL MI

அதாவது ஐபிஎல் என்பது கிரிக்கெட்டையும் தாண்டி வியாபாரப் பொருளாக மாறிவிட்டதாக தெரிவிக்கும் ரசித் லதீப் அந்த பொருளுக்கு கிரிக்கெட் எனும் போர்வையை போர்த்தி ஐபிஎல் எனும் பெயரை வைத்தாலும் அது வியாபாரமே என்று கூறியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டை காணாமல் போக வைப்பதற்கான முதல் படியை தொட்டுள்ள ஐபிஎல் எங்கு போய் முடிகிறது என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement