97 டெஸ்ட் போட்டியில விளையாடிட்டேன். அப்பவும் தோனி என்னை ஆதரிக்க இதுவே காரணம் – மனம்திறந்த இஷாந்த் சர்மா

Ishanth
- Advertisement -

இசாந்த் சர்மா தனது 17 வயதில் இருந்தே இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக ஆடிவருகிறார். 2007 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 97 டெஸ்ட் போட்டிகளிலும், 80 ஒரு நாள் போட்டிகளிலும் 14 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் தான் இவர் அதிகமாக ஆடியிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக தோனியின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளுக்கு பிரதான வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் இஷாந்த் ஷர்மா. இந்நிலையில் சமீபத்தில் தோனியை பற்றியும் தன்னை எப்படி தோனி அணுகினார் என்பது பற்றியும் பேசுகிறார் இஷாந்த் ஷர்மா. அவர் கூறுகையில்…

எனக்கு உலக கோப்பை தொடரில் ஆட வேண்டும். உலக கோப்பை தொடரில் விளையாட யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அது உண்மையாகவே வேறு ஒரு உணர்வாகும். நாங்கள் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடுகிறோம். அது ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு சமமானதாகும்.

Ishanth-2

என் திறமை மீது இருந்த நம்பிக்கையால் நான் 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகும்கூட தோனி என்னை ஆதரித்தார். எனக்கு பதிலாக வேறு ஒரு பந்து வீச்சாளரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று எப்போதும் கூறியதில்லை. உண்மையை கூற வேண்டுமென்றால் 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரும் கூட எனக்கு சராசரி, ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை.

Ishanth

நான் இதனைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. இவை எல்லாம் வெறும் எண்கள் மட்டுமே. இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுகிறார் என்றால் நான் 20 ஓவர்கள் வீசி 40 ரன்கள்தான் கொடுத்திருக்கவேண்டும். சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்து விடுவார்கள் .அப்போது எனது பவுலிங் சராசரி 37 என்று இருக்கும் இதனைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை என்று கூறியுள்ளார் இசாந்த் சர்மா.

Advertisement