நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இவர் ஆரம்ப காலத்தில் கொடுத்த அட்வைஸ் தான் காரணம் – இஷாந்த் நெகிழ்ச்சி

Ishanth

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகும்.

ஏற்கனவே முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இன்று துவங்க உள்ள போட்டி இஷாந்த் சர்மாவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இது குறித்து ஆன்லைன் மூலமாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இஷாந்த் சர்மா கூறுகையில் : நான் எப்போதும் அணியின் வெற்றிக்காக விளையாடுவேன் என்னால் முடிந்த வரை தொடர்ந்து விளையாடுவதே எனது நோக்கமாக வைத்துள்ளேன்.

உங்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்போது அதை திரும்பிப் பார்க்கையில் 100 டெஸ்ட் விளையாடியது ஒரு சாதனையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சாதனை எல்லாம் எனக்கு வெறும் நம்பர் தான். நான் இந்த நம்பர்களுக்காக விளையாடவில்லை வெல்வதற்காகவே விளையாடுகிறேன் என்னுடைய அணி எப்பொழுதெல்லாம் நெருக்கடி சந்திக்கிறதோ அப்போது விக்கெட் எடுத்து காப்பாற்றுவது மட்டுமே என்னுடைய பணி, அதில் எப்போதும் கவனம் வைத்திருப்பேன்.

Ishanth

இந்த 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகப் பெருமையாக இருக்கிறது. ஆரம்பகாலத்தில் ஜாகிர்கான் இடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் எப்பொழுதும் எனக்கு உடல் தகுதியும் அவசியத்தை சொல்லிக்கொண்டே இருப்பார். அதுவும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் எந்த அளவுக்கு உடற்தகுதி முக்கியம் என்று அவர் கொடுத்த அறிவுரைகளே தற்போது 100 டெஸ்ட் போட்டியில் விளையாட காரணம்.

- Advertisement -

Ishanth-1

அதைத் தான் இப்போதும் நான் என்னுடைய அணி வீரர்களுக்கு சொல்லி வருகிறேன். இன்னும் சில ஆண்டுகள் என்னால் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்றும் இஷாந்த் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.