மைதானத்தில் நேரடியாக இவருக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்வதே எனக்கு பிடிக்கும் – இஷாந்த் சர்மா ஓபன் டாக்

Ishanth
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், அணியின் சீனியர் பவுலருமான இஷாந்த் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவதில்லை. தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். மேலும் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் இஷாந்த் சர்மாவை சொந்தக்காரராக திகழ்கிறார்.

Ishanth-1

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு தனது அறிமுக போட்டியை கும்ப்ளேவின் தலைமையில் ஆரம்பித்த இஷாந்த் ஷர்மா தற்போது வரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது கோலியின் தலைமையில் விளையாடி வரும் இசாந்த் சர்மா அணியின் சீனியர் பவுலராக இருப்பது மட்டுமின்றி 297 விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியதில் தான் யாரை ஸ்லெட்ஜிங் செய்தது மிகவும் பிடிக்கும் என்று தனது நினைவை அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் மற்றும் தற்போதைய சிறந்த பேட்ஸ்மேனாகிய ஸ்மித் ஆகிய இருவரையும் இஷாந்த் சர்மா மைதானத்தில் நேரடியாக ஸ்லெட்ஜிங் செய்துள்ளார்.

ponting

2007ஆம் ஆண்டு பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாண்டிங்கை வீழ்த்திய இஷாந்த் சர்மா அவருக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்திருந்தார். அதேபோன்று 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து விட்டு அவரை நோக்கி ஒரு முக பாவனை மூலம் தனது ஸ்லெட்ஜிங் அவர் செய்தார்.

- Advertisement -

அந்த முக பாவனை செய்கை ரசிகர்களிடையே மிகப் பிரபலமானது என்று இன்றுவரை பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரில் யாரை ஸ்லெட்ஜிங் செய்வது உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்வதே எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கிண்டல் செய்துள்ளார்.

smith

ஸ்லெட்ஜ்ங் செய்வதில் ஆஸ்திரேலிய வீரர்களே வல்லவர்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் அவர்களையே ரசித்து ரசித்து ஸ்லெட்ஜிங் செய்தவர் இஷாந்த் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு படியாக ஸ்மித்தை ஸ்லெட்ஜிங் செய்வது பிடிக்கும் என்று கூறியிருப்பது ரசிக்கத்தக்க ஒன்றுதான்.

Advertisement