கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஏற்ற இறக்கம் இருக்கக்கூடாது. சமநிலை சிதைந்து விடும் – ஐ.சி.சி க்கு இஷாந்த் சர்மா வேண்டுகோள்

Ishanth-1
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவுவதன் காரணமாக இனி பந்தில் எச்சிலை இனிமேல் தடவக் கூடாது என்று ஐசிசி தடை விதித்து விட்டது. பந்தில் எச்சில் தடவில்லை என்றால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் குறையும். இதனால் பல வீரர்கள் பந்தினை கிரிக்கெட் போட்டியின்போது பதப்பபடுத்த எச்சிலுக்கு பதிலாக வேறு மாற்று வழியை ஐசிசி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐ.சி.சி யின் இந்த புதிய விதிமுறை குறித்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் இதே கருத்தினை வழிமொழிந்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்… பந்தில் உமிழ்நீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டால் பந்து வழக்கமாக இருப்பது போல ஸ்விங் ஆகாது.

ஏற்கனவே பவர் பிளேவில் உள்ள விதிமுறைகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ள நிலையில் இப்படியே சென்றால் கிரிக்கெட் போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமானதாக மாறிவிடும். பந்துவீச்சாளர்களுக்கு என எந்த ஒரு சாதகமான நிலைமையும் இல்லாமல் மாறிவிடும் இதனால் பந்துவீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Ishanth

இதன் காரணமாக போட்டிகள் சரியான சரி சமபலத்துடன் நடக்காது என்று கூறியுள்ளார் இசாந்த் சர்மா. கிரிக்கெட் போட்டியில் புதிய பந்துகளை பதப்படுத்த எச்சிலும், பழைய பந்துகளை பதப்படுத்த வியர்வையும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதனை தடை செய்துவிட்டால் பேட்ஸ்மேன்களுக்கு இது மிகப்பெரும் சாதகமாக அமைந்துவிடும்.

Ishanth-1

இதன் காரணமாகவே இந்த விதியை மாற்றி அமைக்க வேண்டும் என உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்த விதிமுறையில் சற்று மாற்றம் கொண்டு வர கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இஷாந்த் சர்மாவின் இந்த பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement