தலைவலி, சோர்வு எல்லாம் இருக்கு. தூங்கவே இல்லை இருப்பினும் அணி கேட்டுக்கொண்டதால் விளையாடுறேன் – இந்திய வீரர் அதிர்ச்சி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை குவித்தது.

rahane

- Advertisement -

நியூசிலாந்து அணி சார்பில் கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 89 ரன்களை சேர்த்தார் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நேற்றுவரை சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார். மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சம்பந்தமாக பேசிய அனுபவ வீரர் இஷாந்த் சர்மா போட்டிக்கு பிறகு பேசியதாவது :

தற்போது நான் மகிழ்ச்சியாகவே இல்லை ஏனென்றால் நான் கடந்த இரண்டு நாட்களாக தூங்கவே இல்லை இன்றுகூட சிரமப்படுகிறேன். நான் விரும்பி விதத்தில் என்னால் பந்து வீச முடியவில்லை அணி நிர்வாகம் என்னை கேட்டுக் கொண்டதால் விளையாடினேன். அணிக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இல்லை என்பது பந்து வீசுவதில் அல்ல என்னுடைய உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை.

Ishanth

நேற்று இரவு 40 நிமிடங்கள் மட்டுமே தூங்கினேன். அதற்கு முந்தைய நாள் மூன்று மணி நேரம் தான் தூங்கினேன். ஆகையால் தூக்கமின்மை, தலைவலி, தலைசுற்றல், சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு போன்றவை என்னிடம் உள்ளது. எது எப்படி இருந்தாலும் என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் நன்றாக தூங்கினாலே நான் நன்றாக மீண்டு வருகிறேன் என்று இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement