எனது 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இரண்டு போட்டிகளை என்னால் மறுக்க முடியாது – இஷாந்த் சர்மா பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், அணியின் சீனியர் பவுலருமான இஷாந்த் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவதில்லை. தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். மேலும் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் இஷாந்த் சர்மாவை சொந்தக்காரராக திகழ்கிறார்.

Ishanth

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு தனது அறிமுக போட்டியை கும்ப்ளேவின் தலைமையில் ஆரம்பித்த இஷாந்த் ஷர்மா தற்போது வரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது கோலியின் தலைமையில் விளையாடி வரும் இசாந்த் சர்மா அணியின் சீனியர் பவுலராக இருப்பது மட்டுமின்றி 297 விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் சர்மா அறிமுகமான புதிதில் அசத்தலாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்த வண்ணம் இருந்தார். ஆனால் அதன் பின்னர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் தொடர்ச்சியாக மூன்று நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பதிமூன்று ஆண்டுகளும் தனக்கான இடத்தை டெஸ்ட் போடுகிற தக்கவைத்துக் கொண்டே வந்துள்ளார்.

Ishanth-1

மேலும் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவர் தற்போதும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை என்றாலும் அந்த தொடரில் அவர் ஒரே போட்டியில் விளையாடியதால் அவர் மீது எந்த குறையும் கூற முடியாது.

- Advertisement -

இந்நிலையில் தனது 13 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் தனது இரண்டு சிறந்த ஸ்பெல் என்று அவர் தெரிவித்தது யாதெனில் 2007 ஆம் ஆண்டு பெர்த்தில் வீசிய ஸ்பெல் மற்றும் 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வீசிய இரண்டுமே தனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்று கூறியுள்ளார். ஏனெனில் அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை தனது அசாத்திய பௌலிங் இன் மூலம் வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Ishanth-2

அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஆடியபோது இரண்டினையும் அப்போது அசைக்கமுடியாத கேப்டனாக இருந்த பாண்டிங்கை இரண்டு இன்னிங்ஸ்களிலும் வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி 2014ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த போது 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement