அப்பாடா ஒரு வழியா பாஸ் ஆயாச்சு. நியூசிலாந்துக்கு பறக்கும் முன்னணி நட்சத்திரம் – நல்ல நேரம் வந்தாச்சு

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அடங்குவதால் இந்த தொடரில் இந்திய அணி வெல்ல முனைப்புக் காட்டும்.

Ishanth

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ரஞ்சி கோப்பை போட்டியின்போது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்து அவதிப்பட்டு வந்தார். அதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இருந்தும் முழு உடல் பரிசோதனைக்கு பிறகே அவர் இடம் பெறுவது உறுதி செய்யப்படும் என்று ஏற்கனவே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற் தகுதியை இசாந்த் சர்மா நிரூபித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரது பந்து ரிதமும் சீராக இருப்பதால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கலாம் என்று பிட்னெஸ் டெஸ்டிற்கு பிரகள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ishanth

அதனால் இஷாந்த் சர்மா இந்த தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் சற்று மந்தமான பவுலிங்கை அளித்த இந்திய வீரர்கள் இந்த தொடரில் மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இருப்பதால் தற்போது இஷாந்தின் வருகையும் ரசிகர்களுக்கும், நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Advertisement