சென்னை டெஸ்ட் : இஷாந்த் சர்மா கலக்கல் சாதனை. வேறலெவல் சார் நீங்க – ரசிகர்கள் வாழ்த்து

Ishanth
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Ashwin

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்துள்ளது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் இழந்தது.

ishanth 1

அதனை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டை கைப்பற்ற நினைத்த விராட் கோலி பந்தை இஷாந்த் ஷர்மாவிடம் கொடுத்தார். இஷாந்த் சர்மா வந்ததும் இங்கிலாந்து வீரர் லாரன்சை விழுத்தி புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். அந்த சாதனை யாதெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா வீழ்த்திய இந்த முதல் விக்கெட் அவரது 300வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது. இந்த சாதனையை இதற்கு முன்னர் கபில் தேவ் மற்றும் ஜாகிர் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக நிகழ்த்தியுள்ளனர்.

Ishanth

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்று விளையாடினால் இந்திய அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைப் பட்டியலிலும் அவர் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement