இஷாந்த் சர்மா விரலில் போடப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட தையல். காயம் எப்போ சரியாகும் – ரிப்போர்ட் இதோ

Ishanth-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் அனுபவ நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவின் நடுவிரல் மற்றும் நான்காம் விரலிலும் காயம் ஏற்பட்டது. ராஸ் டைலர் அடித்த பந்தை தடுக்க முயற்சித்த இஷாந்த் ஷர்மாவின் விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ishanth

- Advertisement -

இதனால் அவர் இரு விரல்களிலும் பத்துக்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுள்ளார் என்ற தகவலும், இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனாலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது அவரது காயத்திற்கான சிகிச்சை எடுக்க மருத்துவமனை சென்று உள்ள இஷாந்த் சர்மாவின் கையில் பத்து தையல்கள் போடப்பட்டு இரண்டு விரல்களிலும் தையல் போடப்பட்டுள்ளது. இதனால் இஷாந்த் சர்மாவின் காயத்தின் தன்மை தீவிரமாக இருக்கும் என்றும் அவர் இனி வரும் போட்டிகளில் ஆடுவது சந்தேகம் என்று அனைவரும் யூகித்த வந்தனர்.

ishanth 1

இந்நிலையில் தற்போது இஷாந்த் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இசாந்த் கையில் 10க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த காயம் பத்தே நாட்களில் சரியாகிவிடும் இதனால் பயப்பட ஒன்றும் இல்லை. கட்டாயம் இஷாந்த் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பேயாட தயாராகிவிடுவார்.

ishanth 2

அதுமட்டுமின்றி இங்கிலாந்து தொடருக்கு இன்னும் ஆறு வாரங்கள் கால அவகாசம் இருப்பதால் நிச்சயம் அவர் நல்ல உடல் தகுதியுடன் இந்த தொடரில் விளையாடுவார் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement