இங்கிலாந்து மண்ணில் கபில் தேவின் சாதனைய முறியடித்த இஷாந்த் சர்மா – என்ன சாதனை தெரியுமா ?

Ishanth
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி கடந்த 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட முதல் நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

IND

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சை 217 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. இந்திய அணி சார்பாக ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் குவித்தனர். அதன் பிறகு தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து அணி நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 101 ரன்கள் குவித்து இருந்தது.

நியூசிலாந்து அணி சார்பாக துவக்க வீரர்கள் லதாம் 32 ரன்களும், கான்வே 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வந்த வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டைலர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நான்காம் நாள் போட்டி துவங்க வேண்டிய இன்று மீண்டும் மைதானத்தில் மழை வந்துள்ளதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Rain

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் கான்வேவை 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார். இந்த விக்கெட்டின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் ஒரு முக்கியமான சாதனையை முறியடித்துள்ளார்.

Ishanth

அந்த சாதனையைக் யாதெனில் இதுவரை இங்கிலாந்து மண்ணில் கபில்தேவ் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலையில் இருந்தார். அவரது இந்த சாதனையை முறியடித்த இசாந்த் சர்மா 13 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் விளையாடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement