கொரோனா வேளையிலும் வெளிப்புற பயிற்சியை துவங்கிய இந்திய வீரர்கள்

Ishanth-1
- Advertisement -

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்கு முடங்கியுள்ளனர்.

மேலும் பல்வேறு மாநிலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் தடை செய்யத்துள்ளது பி.சி.சி.ஐ. இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

- Advertisement -

மேலும் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளம் மூலமாக வீட்டில் இருந்தபடியே ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் இன்னும் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்கின்றனர். யாரும் வலைப்பயிற்சியினை கூட தொடங்காத நிலையில் மீண்டும் எப்போது மைதானத்திற்கு வந்து பயிற்சியை மேற்கொள்வது என்பது குறித்த உத்தரவை பி.சி.சி.ஐ இன்னும் வெளியிடவில்லை.

ஆனால் ஒரு சில மாநிலங்களில் சற்று தளர்வுகளுடன் வீரர்கள் உட்புற பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவினை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் : நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள தனிமனித இடைவெளியுடன் கூடிய பயிற்சி அவசியமாகிறது என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல் டெஸ்ட் அணியின் முக்கியமான புஜாராவும் தனது பயிற்சியைத் தொடங்கி உள்ளார் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement