பும்ரா மீது விராட் கோலி ரொம்ப கோவமா இருந்தார். ஏன் தெரியுமா? – இஷாந்த் சர்மா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Ishant-and-Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி அறிமுகமான அந்த ஆண்டே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த ஆண்டு மட்டும் 48 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் திகழ்ந்தார்.

Bumrah

- Advertisement -

ஆனால் இடையில் ஒரு போட்டியில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியாத வேளையில் விராட் கோலி அவர் மீது கடுமையான அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து பிரபல தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் சர்மா கூறுகையில் :

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த தொடரின் ஒரு போட்டியில் பும்ராவால் முதல் ஸ்பெல்லில் சரியாக பந்துவீச முடியவில்லை. இதனால் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அவர் மீது மிகவும் கோபமாகவும், அதிருப்தியாகவும் இருந்தார்.

bumrah 1

மேலும் என்னிடம் வந்த அவர் நீங்கள் சென்று பும்ராவிடம் அட்வைஸ் சொல்லுங்கள். அவர் உங்களது பேச்சு கேட்டாவது சிறப்பாக பந்து வீசட்டும் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் : பும்ரா ஒரு ஸ்மார்ட்டான பந்துவீச்சாளர். அவரை கொஞ்ச நேரம் தனிமையில் விடுங்கள். என்ன செய்வதென்று அவருக்கே தெரியும். நிச்சயம் அவர் சரியாக வீசுவார் என்று கூறினேன்.

- Advertisement -

அதன் பிறகு பும்ரா சுதாரித்துக் கொண்டு தனது பந்துவீச்சை மேம்படுத்திக் கொண்டார் என்று இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசி அவர் : பும்ரா ஒருநாள் மிகப்பெரிய வீரராக வருவார் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன்.

இதையும் படிங்க : இது அவங்க ஊர் இல்ல, இந்த சீரிஸ் நம்ம மண்ணுல நடக்கும் போது நாம ஏன் பயப்படணும் – புஜாரா கெத்தான பேட்டி

அவர் போட்டியை நன்றாக புரிந்து வைத்திருப்பவர். அதுமட்டும் இன்றி சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது பந்து வீச்சிலும் வேரியேஷன்களை செய்யக்கூடியவர். அந்த வகையில் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என பும்ரா குறித்து இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement