இது அவங்க ஊர் இல்ல, இந்த சீரிஸ் நம்ம மண்ணுல நடக்கும் போது நாம ஏன் பயப்படணும் – புஜாரா கெத்தான பேட்டி

Pujara
- Advertisement -

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் துவங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிக் கொள்ளும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் எதிரெதிர் அணிகளில் விளையாடுவதால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

Pujara 1

- Advertisement -

மறுபுறம் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் தங்களது சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க களமிறங்குகிறது. முன்னதாக 2018/19, 2019/20 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைப்பதற்கு பேட்டிங் துறையில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை காட்டிலும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் செட்டேஸ்வர் புஜாரா தான் முக்கிய காரணமாக அமைந்தார் என்பதில் சந்தேகமில்லை.

நம்ம ஊர்ல பயம் எதுக்கு:
பொதுவாகவே பொறுமையின் சிகரமாக அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை குவிக்கக்கூடிய அவர் 2018/19 தொடரில் அபாரமாக செயல்பட்டு 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்று ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சரித்திரம் படைக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல் 2020/21 தொடரில் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் பாறையை போல் நின்று அதிக பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக செயல்பட்ட அவர் மீண்டும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

pujara

அப்படி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே அசால்டாக எதிர்கொண்ட புஜரா மொத்தமாக 20 போட்டிகளில் 1893 ரன்களை 54.09 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து எப்போதுமே அந்த அணிக்கு எதிராக அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் எப்போதுமே ஆஸ்திரேலியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது தான் மிகவும் கடினம் என்று புஜாரா தெரிவித்துள்ளார். இருப்பினும் இதற்கு முன் தம்மை 10 முறை அவுட் செய்துள்ள நேதன் லயன், 6 முறை அவுட் செய்துள்ள பட் கமின்ஸ் ஆகியோரை திறம்பட எதிர்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர்களிடம் நல்ல அனுபவம் உள்ளது. அவர்கள் தங்களது பலத்தை புரிந்து கொண்டுள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு எதிரான கடினமான போட்டி எப்போதுமே ஆஸ்திரேலியாவில் தான் இருக்கும். அதே சமயம் அதற்க்கு ஈடாக அவர்கள் இந்தியாவிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆனாலும் அவர்களுக்கு எதிரான என்னுடைய முக்கியமான போட்டி எப்போதுமே ஆஸ்திரேலிய மண்ணில் தான் இருந்துள்ளது. எனவே ஒரு பேட்ஸ்மேனாக அவர்களை அடுத்தடுத்து அடிப்பதற்கான திட்டங்களை நீங்கள் வகுக்க வேண்டும்”

pujara

“மேலும் என்னுடைய கேரியரில் 2013 – 14இல் டேல் ஸ்டைன், மோர்னி மோர்கல் ஆகியோர் உச்சகட்ட பார்மல் இருந்த போது எதிர்கொண்டுள்ளேன். அவர்களை குறிப்பாக தென்னாபிரிக்காவில் எதிர்கொள்வது பெரிய சவாலாகும். அதே போல் இங்கிலாந்தில் ஆண்டர்சனை எதிர்கொள்வது சவாலாகும். அதே போலவே ஆஸ்திரேலியாவில் பட் கமின்ஸை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும். உங்களது கேரியரில் கடினமான நேரங்களும் இருக்கும்”

இதையும் படிங்க: நான் ரமீஸ் ராஜாவை விட ரொம்ப ஸ்ட்ரிக்ட் எங்களோட மோதாதிங்க, ஜெய் ஷா’க்கு புதிய பாக் தலைவர் எச்சரிக்கை – வெளியான தகவல்

“சாதாரணமாக பேட்டிங் செய்யும் போது எளிதாக ரன்கள் வரும் நேரங்களும் இருக்கும். எனவே உங்களது ஷாட்டை அடிப்பதற்கு முன் நீங்கள் சற்று நேரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சில பந்துகள் தேவைப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் களத்தில் அதிக நேரம் இருந்தாலே ரன்கள் தாமாக வரும் என்பது முக்கியமாகும். என்னுடைய கேரியரை நீங்கள் பார்த்தாலும் பெரும்பாலான சமயங்களில் நான் தேவைப்படும் போது மட்டுமே அதிரடியாக ரன்களை எடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement