DC vs GT : போட்டியின் கடைசி 20 ஆவது ஓவரை வீசும் முன்னர் நான் நினைத்தது இதைமட்டும் தான் – இஷாந்த் சர்மா பேட்டி

Ishant-Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முடிந்த 44-வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணியானது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக சேசிங்கில் மாஸ்டர் டீமாக பார்க்கப்படும் குஜராத் அணியை குறைந்த இலக்கிலேயே நிறுத்தி டெல்லி அணி பெற்ற வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

DC

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் டெல்லி அணி முதலில் விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 130 ரன்களை மட்டுமே குவித்தது. டெல்லி சார்பாக அமான் கான் 51 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்திலேயே 32 ரன்களுக்கு நான்கு விக்கெடுகளை இழந்து தருமாறியது.

பின்னர் அபினவ் மனோகர் 26 ரன்கள் எடுத்து சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒருபுறம் கேப்டன் பாண்டியா ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தார். எனவே நிச்சயம் குஜராத் அணி தான் வெற்றி பெறும் இன்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்கிற நிலையில் 19-வது ஓவரின் போது முதல் மூன்று பந்திகளில் மூன்று ரன்கள் மட்டுமே கிடைத்தாலும் கடைசி மூன்று பந்துகளில் ராகுல் திவாத்தியா தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாச கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

Ishant Sharma 2

அப்போது 19 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டை இழந்து 119 ரன்களை குவித்து இருந்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. எனவே நிச்சயம் குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்று பார்க்கப்பட்ட வேளையில் 20-வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்காவது பந்தில் திவாதியாவை ஆட்டமிழக்க வைத்தார். இறுதியில் அந்த ஓவரில் அவர் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 125 ரன்கள் குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் அந்த முக்கியமான 20-ஆவது ஓவரை வீசியது குறித்து பேசிய இஷாந்த் சர்மா கூறுகையில் : நான் வலை பயிற்சியில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் வொயிடு யார்க்கர் பந்தையும் நான் வீசி பழகி வந்தேன். என்னுடைய பயிற்சி இந்த போட்டியில் மிகவும் உதவியது. அதோடு இருபதாவது ஓவரை வீசும் முன்னர் நிச்சயம் என்று போட்டியில் வெற்றி பெற முடியும் என்னும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.

இதையும் படிங்க : வீடியோ : இந்த வருடத்துடன் ரிட்டையர் ஆகுறீங்களா? டேனி மோரிசன் கேள்விக்கு தோனியின் சர்ப்ரைஸ் பதில் இதோ

ராகுல் திவாத்தியா உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவருக்கு எதிராக நான் விக்கெட்டை வீழ்த்தவே முயற்சித்தேன். ஏனெனில் அவரது விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால் அவர் பேட்டிங்கில் என்ன செய்வார் என்பது நமக்கு தெரியும். எனவே இலக்கை எல்லாம் யோசிக்காமல் என்னுடைய பந்துவீச்சை சரியாகவும் மகிழ்ச்சியாகவும் வீசினேன். நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை என்னுள் இருந்ததாலே சிறப்பாக பந்து வீசி போட்டியை வெற்றிகரமாக முடிக்கவும் முடிந்தது என இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement